தூத்துக்குடி நாம் தமிழர் கட்சியினர் மீது பொய் வழக்கு போட்டு சிறை படுத்திய தவெக அரசின் அடக்குமுறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்டம் சார்பாக விவிடி சிக்னல் அருகில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பாக்கியராஜ் தமிழ்நேயன் அன்னலட்சுமி நாராயணன் ஒபிலியா மாரியம்மாள் மண்டல பொறுப்பாளர்கள் ஜெயசீலன் மாரிமுத்து அன்சார் அலி ஜானகிராமன் மருதம் மாரியப்பன் ஜெயபாஸு மற்றும் வழக்கறிஞர் ரவிக்குமார் மதி மகாராஜன் ரமேஷ் ஜேசுராஜ் தகவல் தொழில்நுட்ப பாசறை பொறுப்பாளர்கள் பரதேசி வசந்த் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட ஓட்டப்பிடாரம் திருச்செந்தூர் தூத்துக்குடி கோவில்பட்டி ஸ்ரீவைகுண்டம் விளாத்திகுளம் தொகுதிகளை சோ்ந்தவா்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.