Saturday, 21 Nov 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தமிழகத்தில் நடைபெறும் குற்றச்சம்பவங்களால் நெஞ்சம் பதைபதைக்கிறது தவெக வழங்குவது ஆட்சியா க்ரைம் த்ரில்லர் படமா? முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் காட்டம்

Last updated: October 25, 2026 8:27 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி சட்டம்-ஒழுங்கு சீர்கேடால் தமிழகம் முற்றிலும் பாதுகாப்பற்ற மாநிலமாக மாறி வருகிறது. தவெக வழங்குவது ஆட்சியா க்ரைம் த்ரில்லர் படமா? என கேட்கும் அளவுக்கு குற்றச்சம்பவங்கள் அரங்கேறுவதால் நெஞ்சம் பதைபதைப்பதாக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தவெக ஆட்சிக்கு வந்த 5 மாதங்களில் போதைப் பொருள் கடத்தல், பாலியல் வன்கொடுமைகள், இரட்டைக் கொலைகள், சிறுமிகள் துன்புறுத்தல் என முற்றிலும் பாதுகாப்பற்ற மாநிலமாக மாறிவருகிறது. தவெக வழங்குவது ஆட்சியா… க்ரைம் த்ரில்லர் படமா… இது தமிழ்நாடா.. உத்தரப்பிரதேசமா.. எனக் கேட்கும் அளவுக்கு அடுத்தடுத்து குற்றச் சம்பவங்கள் அரங்கேறுவதால் நெஞ்சம் பதைபதைக்கிறது வேளாங்கண்ணியில் இரண்டு சிறுமிகள் விடுதியில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரியில் கல்லூரி மாணவி தவெக நிர்வாகியால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே வீடு புகுந்து மேரி விஜீலா என்கிற பெண் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு, அவரின் இரண்டு பெண் குழந்தைகளும் கடத்தப்பட்டுள்ளனர். இதில் அவரின் கணவரும் மகனும் படுகாயமடைந்து கணவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். சிவகங்கை மாவட்டத்தில் அடுத்தடுத்த கொலைச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. அதேபோல, தமிழ்நாட்டில் நடக்கும் ஒவ்வொரு பெருங்குற்றங்களுக்குப் பின்னாலும் ஆளும் தவெகவினர் ஒளிந்திருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிய வருகிறது. பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொடர்புடையவர் தவெக எம்எல்ஏ, போதைப் பவுடர் பயன்படுத்துபவர் தவெக அமைச்சர், போதை மாஃபியா தவெக மாவட்டப் பொறுப்பாளர். போதை மாஃபியாவுக்கு உடந்தையாக இருப்பவர் மாவட்டச் செயலாளர். தற்போது குமரி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொடர்புடையவர் தவெகவின் கன்னியாகுமரி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர். 137 கிலோ போதைப் பொருள் விற்றவர் நாகப்பட்டினம் மாவட்டப் பொறுப்பாளர் பூபாலன்.முன்பெல்லாம் ‘திருடர்கள் ஜாக்கிரதை’ என்றுதான் பதாகைகள் வைப்பார்கள். இப்போது ‘தவெகவினர் ஜாக்கிரதை’ என வைக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. சீன்பேப்பர் பார்த்துப் படித்து நடித்து விட்டுச் செல்ல, இது ஷூட்டிங் ஸ்பாட் அல்ல. ஆட்சி! தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்புக்கென பிரத்யேகமாக சிங்கப் பெண் சிறப்பு அதிரடி படையை அமைத்தார் முதல்வர் விஜய். சிட்டிசன் படத்தில் அத்திப்பட்டி என்ற கிராமம் காணாமல் போனது போல, தமிழ்நாட்டில் பெண்களும் சிறுமிகளும் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகிவரும் சூழலில் அந்த படையே காணாமல் போய்விட்டது. எனவே தனிப்படை ஒன்றை அமைத்து சிங்கப் பெண் சிறப்பு அதிரடி படையை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வரை வலியுறுத்துகிறேன் இவ்வாறு கூறி உள்ளார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் தவெக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி சாா்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Next Article தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டம் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் நடைபெற்றது

You Might Also Like

அரசியல்தமிழகம்தூத்துக்குடி

காமராஜரை இழிவாக பேசிய திமுக எம்பி திருச்சி சிவா மீது திமுக நடவடிக்கை எடுக்காததால் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் முதல்வர் வருகையின்போது கருப்பு கொடி ஏந்தி போராட்டம் தூத்துக்குடியில் பரபரப்பு!!!

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை தீவிரம் – 825 டன் நுண் உரம் தயாரிப்பு

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தமிழகத்தின் உதயசூாியன் ஸ்டாலின் வழியில் மக்களுக்காக பணியாற்றினோம் தோல்வியை கண்டு துவழாமல் எழுச்சியுடன் பணியாற்றுவோம். தூத்துக்குடி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் உருக்கம்

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு நடைபெற்ற சிறப்பு கண் பரிசோதனை முகாம் வாசன் கண் மருத்துவா் டாக்டா் கனிமொழி அட்வைஸ்

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?