தூத்துக்குடி கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை முடக்க நினைக்கும் த.வெ.க அரசுக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனடைந்து வந்த பலருக்கு இம்மாதத்துக்கான தொகை வரவில்லை என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தையும் சுயமரியாதையும் கருத்தில் கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அமல்படுத்தினார் முன்னாள் முதல்வா் ஸ்டாலின், 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திமுக ஆட்சியில் தவறாமல் மாதா மாதம் 14, 15-ம் தேதிகளில் வரவு வைக்கப்படும். ஆனால் நவம்பர் மாத தொகை பயனாளிகளுக்கு இதுநாள்வரை வரவில்லை. சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையை தன்வசம் வைத்திருக்கும் முதல்வர் விஜய்க்கு மகளிர் உரிமைத்தொகையை முழுமையாக சென்றடையவில்லை என்ற தகவல் தெரியுமா? நான் முதலமைச்சரானால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 உரிமைத்தொகையைக்கூட தகுதியுள்ள பெண்களுக்குத் தொடர்ந்து வழங்காமல் நிறுத்துவது எந்த வகையில் நியாயம் கடந்த அக்டோபர் 24ம் தேதி விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விரைவில் மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்று அறிவித்தார். அறிவிப்புக்கு முற்றிலும் மாறாக வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 உரிமைத்தொகையைத் தொடர்ந்து வழங்காமல் நிறுத்த முனைவது ஏன்? எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் முன்வைக்கும் கேள்விகளுக்கு எந்தவித பதிலும் சொல்லாமல் மெளனமாக இருக்கும் முதல்வர் இதற்காவது உரிய விளக்கத்தை அளிப்பாரா? தி.மு.க ஆட்சியில் உருவாக்கப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை முடக்குவது நல்லாட்சிக்கான அடையாளமல்ல மக்களின் நம்பிக்கைக்குச் செய்யும் துரோகம். எனவே உடனடியாக அனைத்து பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகையை விடுவிக்க வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்துகிறேன் என்று வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கூறியுள்ளாா்.