தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் பாரதி நகர் ஓஹச்டி அருகில் வைத்து ஊராட்சி மன்ற தனி அலுவலர் ரஞ்சித் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் சுகாதாரத்துறை சார்பாக சுகாதார ஆய்வாளர் டெங்கு விழிப்புணர்வு மற்றும் உண்ணிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி எடுத்துரைத்தார். குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் குழந்தைகள் நலன் பேணுதல் மற்றும் போதை ஒழிப்பு மூலம் குடும்ப நலன் பேணுதல் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. 60க்கும் மேற்பட்ட மனுக்கள் அந்தந்த துறை அலுவலர்களிடம் அளிக்கப்பட்டது. பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றியும் இலவச சட்ட உதவி பெற குறிப்பிட்ட தகுதிகள் பற்றியும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது
தூய மரியன்னை கல்லூரி செயலாளர் முனைவர் குழந்தை தெரஸ், கல்லூரி முதல்வர் ஷிபானா, துணை முதல்வர் எழிலரசி, சுயநிதி பிரிவு இயக்குனர் முனைவர் ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் மற்றும் உன்னத் பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர் முனைவர் புலோமின் ரெஜி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி கல்லூரியின் சமுதாய மேம்பாட்டுத் திட்டம், உன்னத் பாரத் அபியான் மற்றும் ஸ்பார்க் அறக்கட்டளை அமைப்பின் சார்பில் வரலாற்று துறை இரண்டாம் ஆண்டு மாணவிகள் சோபியா, ஜெசிகா, மரிய ரெனியா, பேச்சியம்மாள் துணை பேராசிரியை மேரி வினோ லோபோ மற்றும் வேளாண்மை துறை, மாவட்ட சட்டப் பணிகள் குழு அதிகாரி, மின்சார வாரியம், காவல்துறை மற்றும் பிற பொதுப்பணி துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை முனைவர் தெரேசம்மாள், முனைவர் மேரி வினோ லோபோ ஆகியோர் செய்திருந்தனர்.