தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகாவில் அமைந்துள்ள தருவைக்குளத்தில் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் 6 வது ஆண்டாக காந்தி பிறந்தநாள் காமராஜரின் நினைவு நாளை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு பேச்சு போட்டி மற்றும் ஓவியப் போட்டி சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்றது
தருவைக்குளம் காமராஜா் நற்பணி மன்ற தலைவர் அனிட்டன் தலைமை வகித்தாா். அமைப்பாளர் அசோகன் முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக தமிழ்ச்செம்மல் இராஜேந்திரன் பாண்டியனார் தொழிற் சங்க பொருளாளர் சேகர் பாண்டியன் தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றத் தலைவர் சண்முக சுந்தரம் நாடாா் மஹாஜன சங்க இளைஞரனி செயலாளர் சங்கீத ராஜ் வெள்ளச்சாமி நாடார் கல்லூரி முன்னாள் துனைத் தலைவர் சந்தோச பாண்டியன் வெள்ளிச் சாமி நாடார் கல்லூரி செயற்குழு உறுப்பினர் கந்தசாமி ஆகியோா் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கும் கலந்து கொண்டவா்களுக்கும் சான்றிதழகள் பாிசுகள் வழங்கினாா்கள்.
முன்னதாக போட்டிகளை புத்தகம் வாசிப்பு மன்றத் தலைவர் எழுத்தாளர் மாரிமுத்து தொடங்கி வைத்தார் காமராஜர் முகம் போட்டிருந்த முகமூடி அனிவித்து காமராஜருக்கு அஞ்சலி செலுத்தினர்கள் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை தருவைக்குளம் காமராஜர் நற்பணி மன்ற தலைவர் லாரன்ஸ் செய்திருந்தார்