தூத்துக்குடி தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் வ.உ.சி கல்லூரியில– புவியியல் துறை சார்பில் நடைபெற்றது.
கருத்தரங்கில் அண்ணா பல்கலைக்கழகம், மதராஸ் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), அழகப்பா அரசு கலைக் கல்லூரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கோவை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவில்பட்டி; அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேட்டூர்; மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், நேஷனல் கல்லூரி, திருச்சி; பெரியார் பல்கலைக்கழகம், பிரசிடென்சி கல்லூரி, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, உள்பட மொத்தம் 14 கல்வி நிறுவனங்களில் இருந்து 95 மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆறு போட்டிகள் நடைபெற்றன.
துவக்க விழாவில் முதல்வர் வீரபாகு தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஜோசன், சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கலந்து கொண்டார். நிறைவு விழாவில் கௌரவ செயலாளர் சொக்கலிங்கம், பரிசுகளை வழங்கினார். முன்னாள் துறைத் தலைவர் முனைவர் சிவசுப்ரமணியன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தலைவர் முனைவர் ஸ்ரீனிவாஸ், கல்லூாி முதல்வர் முனைவர் வீரபாகு, கலந்து கொண்டனர்.
மொத்த சாம்பியன் அண்ணா பல்கலைக்கழகம் சென்னை முதல் இரண்டாம் பரிசு மதராஸ் பல்கலைக்கழகம், சென்னை இரண்டாம் இரண்டாம் பரிசு அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம் வெற்றியாளர்களுக்கு மொத்த சாம்பியனுக்கு ₹10,000, முதல் இரண்டாம் பரிசுக்கு ₹5,000, இரண்டாம் இரண்டாம் பரிசுக்கு ₹3,000 மற்றும் சாம்பியன் கோப்பை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கோயம்புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த ரம்யாஸ்ரீக்கு விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை முனைவர் செல்வம், முனைவர் ராஜமாணிக்கம் முனைவர் ஸ்டீபன், உள்பட உதவி பேராசிரியர்கள், ஒருங்கிணைந்து பணியாற்றினாா்கள்