தூத்துக்குடி முள்ளக்காடு பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்து கிராம சபை கூட்டம் நடைபெற்றது இதில் முள்ளக்காடு பஞ்சாயத்தை சார்ந்த பெரியோர்கள் ஊர் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு மக்களுக்கான பிரச்சினைகளை அரசு அதிகாரிகளிடம் எடுத்துரைத்தனர்.
கிராமசபை கூட்டத்தில் புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் பேசுகையில் திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் உள்ள முள்ளக்காடு பேருந்து நிறுத்தம் இடத்தில் உள்ள பயணியர் நிழற்குடையை அரசு இடித்து விட்டதால் மக்கள் கடும் வெயிலிலும் மழைக் காலங்களிலும் பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணம் செய்ய மிகவும் சிரமப்படுகிறார்கள் ஆதலால் ஏற்கனவே இருந்த பயணியர் நிழற்குடையை மீண்டும் அதே இடத்தில் பாதுகாப்பான முறையில் அமைத்து முள்ளக்காடு பொட்டல் காடு மற்றும் சுற்று வட்டார பகுதியில் வாழக்கூடிய பொதுமக்கள் குறையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பயணியர் நிழற்குடை அமைத்துக் கொடுக்க வேண்டும் எனவும் இந்த கோரிக்கையை கிராமசபை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் மக்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற தவறினால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்பதை அரசின் கவனத்திற்கு தெரிவித்தார்.
மாவட்ட பொருளாளர் மணிகண்டன், வணிகர் அணி செயலாளர் சுடலை மாடன் உரிமை மீட்பு குழு அணி செயலாளர் அருள் தாஸ் கிழக்கு ஒன்றிய செயலாளர் சாமிதுரை உள்பட பலா் கலந்து கொண்டனர்.
முள்ளக்காடு பஞ்சாயத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும கிராமசபை கூட்டத்தில் புரட்சி பாரதம் கட்சி கோாிக்கை