தூத்துக்குடி, ஜூலை 15:
கல்விக்கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124வது பிறந்த நாளை முன்னிட்டு, பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் நாடார் தலைமையில் பல்வேறு பகுதிகளில் காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கல்வி உதவிகள் மற்றும் அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் சிறப்பாக நடத்தப்பட்டன.
முதலில் சேர்வைக்காரன்மடம் பகுதியில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அங்குள்ள பள்ளி மாணவ, மாணவியருக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து குலயன்கரிசல் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, அங்குள்ள மாணவர்களுக்கும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. சிறுபாடு பகுதியில் பள்ளி மாணவ, மாணவியருக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பள்ளிப் பைகள் வழங்கப்பட்டன.
சேர்வைக்காரன்மடம் பகுதியில் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட், பெரிய மார்க்கெட், கிருஷ்ணராஜபுரம் மற்றும் தருவைகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கிருஷ்ணராஜபுரத்தில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியிலும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வேப்பலோடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாகச் சென்று காமராஜர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
வள்ளிநாயகபுரத்தில் நடைபெற்ற விழாவில் கர்மவீரர் காமராஜரின் கல்விப் புரட்சி, மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சமூகப் பணிகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. அட்வகேட் சிலுவை நாடார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளில் பெருந்தலைவர் மக்கள் நல சங்கத்தின் நாகர்கோவில் மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்டத் தலைவர் சங்கர், திருநெல்வேலி மாவட்ட செயலாளர் பழனி, மதுரை மாவட்ட செயலாளர் வெற்றிவேல், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சாமுவேல்ராஜ், மாநில பொருளாளர் ரவிசேகர், மாவட்ட பொருளாளர் செல்வகுமார், மாநில செயலாளர் சண்முகவேல், மாவட்டத் தலைவர் வேல்முருகன், விளாத்திகுளம் மாவட்ட செயலாளர் முனீஸ்வரன், அட்வகேட் சிலுவை நாடார், நாடார் சங்கத் தலைவர் சிவா மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடினர்