தூத்துக்குடி மாவட்ட அனைத்து நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக, தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் ஏற்கனவே காமராஜர் சிலை நிறுவுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை கூட்டமைப்பின் நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டனர்.
காமராஜரின் திருவுருவச் சிலை அமைக்கப்பட உள்ள இடத்தில் இதுவரை உரிய பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியை நேரில் பார்வையிட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவச் சிலையை புதிய பேருந்து நிலையத்தில் விரைவாக நிறுவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைப்பது குறித்தும் கூட்டமைப்பு சார்பில் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
காமராஜரின் நினைவைப் போற்றும் வகையில், புதிய பேருந்து நிலையத்தில் சிலை அமைக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பதே கூட்டமைப்பின் கோரிக்கையாக உள்ளது.