தூத்துக்குடியில் மகாத்மா காந்தியின் பிறந்தநாளான 02.10.2026 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட அனைத்து நாடார் கூட்டமைப்பு சார்பாக காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் பி.எம். அற்புதராஜ், பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன், பி.ஜே. அற்புதராஜ், வெங்கடேச பண்ணையார் நற்பணி இயக்க நிர்வாகிகள், சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் எஸ்.பி. சிலுவை BABL, தூத்துக்குடி தென்மண்டல நாடார் சங்கத் தலைவர் எஸ்.டி.கே. சிவா, தமிழ்நாடு காமராஜர் பேரவை மாநில பொதுச் செயலாளர் கே.கே.எஸ். அழகு மந்திரி, தமிழ்நாடு காமராஜர் பேரவை தெற்கு மண்டலத்தைச் சேர்ந்த பி.எஸ். ரமேஷ் பாலன் நாடார், சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பைச் சேர்ந்த முருகன், பாண்டியனார் மக்கள் கழகத்தைச் சேர்ந்த டேவிட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அனைவரும் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.