தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் மண்ணின் மைந்தர்களுக்கு இளைக்கப்பட்ட அநீதியை கண்டு வெகுண்டெழுந்த தூத்துக்குடி மாவட்ட பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு மற்றும் மக்கள் நல கூட்டமைப்பினர் கடந்த 2018 மே 22 அன்று ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் பேரணியின் போது தூத்துக்குடி மண்ணின் மைந்தர்களின் அமைதியான போராட்டத்தை சீர்குழைத்தவர் யார், அமைதியான போராட்டம் எப்படி கலவரமாக வெடித்தது, துப்பாக்கி சூட்டிற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் என்ன தாமதம் என்ற கேள்வியை எழுப்பி வருகிறார்கள். இதன் மத்தியில் கடந்த 31ம் தேதி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டு காரணமானவர்கள் மீது மேல் முறையீடு ரத்து செய்யப்பட்டது என்ற அறிவிப்பானது தமிழ்நாடு தவெக அரசால் வெளியிடப்பட்டது. இந்த செய்தியால் தூத்துக்குடி மண்ணின் மைந்தர்களை வியப்படையை செய்து இருக்கிறது. இந்த செய்தி வலைதளங்கள் மூலமாகவும் காணொளிகள் மூலமாகவும் வெளிவந்த நிலையில், செப் 1ம் தேதி தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற கூட்டம் நடைபெறுகின்ற இந்த நேரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி மக்களுடைய கோரிக்கைகளை சட்டமன்றத்தில் மிக கடுமையாக பிரதிபலிப்பார் என்ற நோக்கத்தில் சென்னையில் தலைமைச் செயலகத்தில் அவரை நேரில் சந்தித்து பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை மனுவை வழங்கினார். இந்த கோரிக்கை மனு சம்பந்தமாக சட்டசபையில் குரல் கொடுக்க வேண்டும் கேள்வி எழுப்ப வேண்டும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு காரணமானவர்கள் மீது மேல் முறையீடு ஏன் ரத்து செய்யப்பட்டது, மண்ணின் மைந்தர்கள் 13 பேரின் துப்பாக்கி சூட்டுக்கு காரணம் என்ன, அமைதியான போராட்டம் எப்படி கலவரமாக வெடித்தது, பொது மக்களை கலவரத்தின் மூலமாக தடுமாறச் செய்தது யார் என்ற கேள்விகளை மையப்படுத்தி குரல் எழுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவரும், சிதம்பரம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான தமிமுன் அன்சாரி சட்டமன்றம் முடிவதற்குள்ளாக கண்டிப்பாக உணர்வு மிக்க உங்களது குரல்களை நான் சட்டமன்றத்தில் கண்டிப்பாக பிரதிபலிப்பேன் என்று பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பினர்களிடம் வாக்குறுதி அளித்தார்.
நிகழ்ச்சியில் தமிழர் விடியல் கட்சி மாவட்ட செயலாளர் சந்தனராஜ் பாண்டியன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அசன், தமிழ் புலிகள் கட்சி மண்டல செயலாளர் தாஸ், ஒன்றிய செயலாளர் சுரேஷ், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ஊர்க்காவல் தமிழர் முன்னேற்ற கழக செயலாளர் ராஜா உள்பட பலா் கலந்து கொண்டனர்.