பெருந்தலைவர் காமராஜரின் நினைவு நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட அனைத்து நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள காமராஜரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் அற்புதராஜ், பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன், பி.ஜே. அற்புதராஜ், வெங்கடேச பண்ணையார் நற்பணி இயக்க நிர்வாகிகள், சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் எஸ்.பி. சிலுவை BABL, தூத்துக்குடி தென்மண்டல நாடார் சங்கத்தைச் சேர்ந்த எஸ்.டி.கே. சிவா, தமிழ்நாடு காமராஜர் பேரவை மாநில பொதுச் செயலாளர் கே.கே.எஸ். அழகு மந்திரி, தமிழ்நாடு காமராஜர் பேரவை தெற்கு மண்டலத்தைச் சேர்ந்த பி.எஸ். ரமேஷ் பாலன் நாடார், சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பைச் சேர்ந்த முருகன், பாண்டியனார் மக்கள் கழகத்தைச் சேர்ந்த டேவிட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, காமராஜரின் திருவுருவச் சிலைக்கு அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காமராஜரின் எளிமை, நேர்மை மற்றும் மக்கள் பணியை நினைவுகூர்ந்து நிகழ்ச்சி நடைபெற்றது.