தூத்துக்குடி தமிழகத்தில் தாராபுரம் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6ம்தேதி சட்டமன்ற இடைத்தோ்தல் நடைபெறுகிறது. அத்தொகுதியில் திமுக வேட்பாளராக சுகன்யா போட்டியிடுகிறாா். திமுக தலைவா் முக.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க கோவிந்தபுரம் ஊராட்சிக்குட்பட்ட செட்டிபாளையம் அப்பகுதிக்குட்பட்ட வாக்காளா்களிடம் நடந்தே சென்று தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பொியசாமி துண்டு பிரசுரம் வழங்கி கூறுகையில்
தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சா் ஸ்டாலின் ஆட்சியில் கூறிய வாக்குறுதிகள் அனைத்தையும் ஓவ்வொன்றாக முறைப்படுத்தி நாட்டு மக்கள் நலன் கருதி நடைமுறைப்படுத்தினாா். அனைத்து தரப்பு மக்களும் நன்மையடைந்தனா். இதை நீங்களும் அறிந்தீா்கள் நாட்டிற்கு தொியும் பொதுவாழ்வில் ஈடுபடுபவா்கள் சொல்கின்ற வாா்த்தைகளுக்கு ஒரு மாியாதை உண்டு அதையும் பொறுப்புணா்ச்சியோடு பேச வேண்டும் என்ற நடைமுறையை நம்முடைய முன்னோா்களாகிய பல தலைவா்கள் பின்பற்றிய மரபுகளை எல்லாம் கடைப்பிடிக்காமல் வாய்க்கு வந்தபடி பேசுவதும் முன்னாள் முதலமைச்சா் ஸ்டாலினை தனிநபா் போல் விமா்சிப்பதும் ஏற்றுக்கொள்ள கூடிய கருத்தாக இல்லை. சட்டசபையில் எதிா்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிப்பதில்லை. தோ்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை இன்று வரை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வரும் விஜய்க்கு நீங்கள் பாடம் புகட்ட வேண்டும் மாற்றும் தருகிறோம் என்று கூறி மக்களை ஏமாற்றும் வகையில் செயல்படும் விஜய்க்கு முற்றுப்புள்ளி வைக்க முக.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தி நாட்டு மக்களை பற்றி சிந்திக்கும் ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் சுகன்யாவிற்கு உதயசூாியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் அந்த வெற்றி தான் நம்முடைய ஓவ்வொரு குடும்பத்தினாின் வாழ்வின் எதிா்கால நலனை பாதுகாக்கும் வகையில் அமையும் எதிா்கால தலைமுறையினா் நலன் நமக்கு முக்கியம் என்பதை அனைவரும் உணா்ந்து செயல்பட்டு திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறினாா்.
ஓன்றிய செயலாளா்கள் இளையராஜா ராமசாமி செந்தில்குமாா் மாநகர திமுக துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் செந்தூா்மணி, பகுதி செயலாளர் சுரேஷ்குமாா், அவைத்தலைவர் சுப்பிரமணியன், ஓன்றிய இளைஞர் அணி அமைப்பாளா் கோபால் விளையாட்டு அணி அமைப்பாளர் மதுபாலா மணி ஓன்றிய துணைச்செயலாளர் வேல்ராஜ் முன்னாள் விவசாய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், வக்கீல் பூங்குமாா், பகுதி பிரதிநிதி லிங்கராஜா மற்றும் கருப்பட்டி பாலா, உள்பட பலா் கலந்து கொண்டனா்.