Wednesday, 21 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

மு.க.ஸ்டாலின் கூட ஒரு நாளைக்கு இத்தனை முறை திமுக என சொல்லியிருக்க மாட்டார் ஆனால் தம்பி விஜய் திமுக, திமுக என 40 முறை பேசி நமக்காக ஓட்டு கேட்கிறார் தாராபுரத்தில் கனிமொழி எம்.பி பேச்சு

Last updated: September 29, 2026 10:26 am
Dinapuratchi
Share
SHARE

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் உள்ள மானூர்பாளையம் உள்பட பல பகுதியில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி வேட்பாளா் சுகன்யாவை ஆதாித்து பேசுகையில்

இந்த இடைத்தேர்தல் வருவதற்கான காரணம், அதிமுகவில் இருந்து ஆளுங்கட்சியாக இருக்கக்கூடியவர்கள், தீர்ந்துபோன சக்தி என்று கூறினார்களே? அங்கிருந்து ஒரு வேட்பாளரைத் தங்கள் பக்கம் இழுத்து, ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு எப்படியாவது சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அந்த வேட்பாளரைத் திருடிக் கொண்டுவந்து, அவரைப் பதவி விலகச் செய்து, மீண்டும் இந்த இடைத்தேர்தலை நடத்துகிறார்கள். அதே வேட்பாளர், முன்னர் உங்களிடம் வந்து இரட்டை இலைச் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றார் வெற்றி பெற்ற பிறகு நன்றி சொல்லக்கூட அவருக்கு நேரம் கிடைக்கவில்லை. ஆனால் இப்போது மீண்டும் நான் விசில் அடித்துக்கொண்டு வருகிறேன் என்று உங்களிடம் ஓட்டு கேட்க வருகிறார். தங்களுக்கு வாக்களித்த மக்களுக்குக்கூட நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்துகொள்ளாத ஒருவரை மீண்டும் மக்களிடம் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். அதுவரை இதே சத்யபாமாவை தீர்ந்துபோன சக்தி என்றார்கள் இப்போது புண்ணிய பராசக்தி என்பது போல உங்களிடம் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள். இத்தனை நாட்களாக அவர் தொலைந்துபோன சக்தி ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தில் வந்து சேர்ந்தவுடனே, ஆட்சியாளர்களுக்கு அவர் திடீரென்று தங்க சத்யபாமா ஆகிவிட்டார். இதுதான் தூய சக்தி செய்யும் வேலையா? இது திருட்டுச் சக்தி செய்யும் வேலை. உண்மையான தூய சக்தி இந்த வேலையைச் செய்யாது. அ ஜெயலலிதா மறைந்த பிறகு, குறுக்கு வழியில் ஆட்சிப் பொறுப்பிற்கு வருவதற்கு எல்லா வாய்ப்புகளும் இருந்தும், பின்வாசல் வழியாக ஆட்சியை நாங்கள் கைப்பற்ற மாட்டோம் என்று உறுதியாக நின்றாரே ஸ்டாலின், அவர்தான் உண்மையான தூய சக்தி. திரும்பத் திரும்ப தூய சக்தி, தீய சக்தி, தொலைந்துபோன சக்தி என்று முதலமைச்சர் விஜய் பேசுகிறார். அவர் இப்போது நமக்குச் சொந்தக்காரப் பையனாகவே மாறிவிட்டார். ஏனென்றால், நம்முடைய அண்ணனைப் பார்த்து மைடியா் ஸ்வீட் அங்கிள் என்கிறார். அதனால் அவரைப் பார்த்து இனிமேல் நான் அன்புத் தம்பி விஜய் என்று அழைக்கலாம் என்றிருக்கிறேன். அன்புத் தம்பி விஜய், காலையில் எழுந்தவுடனேயே திமுகவைத்தான் நினைத்துக்கொண்டு எழுகிறார். வீட்டிலிருந்து அலுவலகத்திற்குப் புறப்படும்போதும் திமுக நினைப்புதான்; அமர்ந்திருக்கும்போதும், முகம் கழுவும்போதும் திமுகதான். டிபன் பாக்ஸைத் திறந்தால் அப்போதும் திமுகவின் நினைப்புதான். அதனால்தான் மதுராந்தகத்தில் தேர்தல் வாக்குறுதிகளைப் பேசி வாக்கு கேட்கும் நேரத்தில், 21 நிமிடங்கள் ஆற்றிய உரையில் எத்தனை முறை திமுக என்று கூறினார் தெரியுமா. கிட்டத்தட்ட 40 முறைக்கும் மேலாக திமுக என்று கூறியிருக்கிறார். நமக்காக அவரே சென்று திமுக, திமுக என்று ஓட்டு கேட்கிறார். அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் கூட ஒருநாளைக்கு இத்தனை முறை திமுக என்று கூறுவாரா எனத் தெரியவில்லை. ஆனால் தம்பி விஜய்க்கு மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் பெயர் எதுவென்று தெளிவாகத் தெரிந்திருக்கிறது. பொதுமக்களாகிய நீங்கள் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றாலும், மக்களுடைய உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றாலும், தேர்ந்தெடுத்த உறுப்பினர்களைப் பத்திரமாக வைத்துக்கொள்ளத் தெரிந்த அண்ணன் தளபதியின் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கே வாக்களியுங்கள். இன்றைக்கு எத்தனை சோதனைகள் வருகிறது என்று பார்க்கிறோம். வாரத்திற்கு ஒருமுறை நமது அண்ணன் நேரு அவர்களின் வீட்டிற்குச் சோதனையிட வருகிறார்கள். யாரைப் பார்த்தாலும் வழக்கு, கைது நடவடிக்கை. ஆனால், இதுவரை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து ஒரு சட்டமன்ற உறுப்பினரோ, மக்கள் பிரதிநிதியோ தடம் மாறியிருக்கிறாரா என்றால், இல்லை என்று பெருமையோடு கூறுவேன். இன்றைக்கு அதிமுகவில் இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி போன்றவர்கள், தன் கையில் கட்சி இருந்தால் போதும் என நினைத்து, அக்கட்சியையே ஒரு நிலையற்ற இடத்திற்குக் கொண்டுவந்து நிறுத்திவிட்டார்கள். எனவே, இங்குள்ள ஆட்சிக்குச் சரியான பாடத்தைப் புகட்ட உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்துச் சகோதரி சுகன்யா அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். தூய சக்தி என்று கூறுகிறாரே, தவெக கட்சியில் உள்ள ஒரு வழக்கறிஞர், அரசு வழக்கறிஞராக நியமிக்க ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கினார் என்று நீர்வளத்துறை அமைச்சர் மீது புகார் அளிக்கிறார். அதற்காகத் தூய சக்தி என்ன செய்தது. புகார் அளித்த அந்தப் பெண்ணையே கட்சியிலிருந்து உடனடியாக நீக்கியது.ஆனால் அமைச்சர் தொடர்ந்து அமைச்சராகவே நீடிக்கிறார். ஈரோடு பகுதியில் மற்றொரு அமைச்சர் சாயப்பட்டறைகளிடம் ரூ.9 கோடி முதல் ரூ.10 கோடி வரை வசூல் செய்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுகிறது. ஆட்சிக்கு வந்த நான்கே மாதங்களில் 10 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். இதுவரை ஒன்றுமே இல்லை. ஆண், பெண் சமம்; பெண்களிடம் மரியாதையாகப் பேச வேண்டும் என்று கூறுகிறீர்கள். ஒரு பெண்ணை தவறாகப் பேசுவது தவறென்றால், ஓர் ஆணைத் தவறாகப் பேசுவது மட்டும் சரியாகிவிடாது. உங்கள் அமைச்சரே உங்கள் கட்சியின் நிர்வாகி ஒருவரை மிரட்டும் தொனியில் மிக மோசமாகப் பேசியிருக்கிறார். அவர் இன்றளவும் அமைச்சராகத்தானே தொடர்கிறார். ஐபிஎல் போட்டியின் போது ஆப்பிள் கைபேசியை வைத்துக்கொண்டு குழந்தைக்கு மருந்து நுணுக்கிக் கொண்டிருந்தாரே, அவரை அழைத்து ஒரு இரத்தப் பரிசோதனைதான் செய்யவில்லை. அது குழந்தைக்கான மாத்திரையா அல்லது அவருடைய மாத்திரையா என்று தெரிந்திருக்குமே, அதுபற்றி என்ன விசாரணை தூய சக்தி நடத்தியது. எனவே அன்புத் தம்பி விஜய் அவர்களே, தூய சக்தி என்று சொல்லும் தகுதியை நீங்கள் எப்போதோ இழந்துவிட்டீர்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே வரி ஏய்ப்பு வழக்கில் சிக்கியவர் நீங்கள்; உங்களால் எப்படித் தூய சக்தியாக இருக்க முடியும். திரும்பத் திரும்ப மேடையேறி தீய சக்தி, தூய சக்தி, திமுக என்று பேசும் உங்கள் உரையின் ஸ்கிரிப்ட்டை மாற்றிக்கொள்ளுங்கள். கடந்த நான்கு மாதங்களாக ஒரே திரைப்படத்தைப் பார்த்துப் பார்த்து மக்கள் சலிப்படைந்துவிட்டார்கள். ஸ்கிரிப்ட்டை மாற்ற முடியவில்லை என்றால், அதை எழுதுபவரையாவது மாற்றுங்கள். பெண்களுக்குப் பாதுகாப்பில்லை, சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று கூறி ஆட்சிக்கு வந்தீர்கள். 12 மணிக்குக் கூட உடலெல்லாம் நகைகளை அணிந்துகொண்டு நிம்மதியாக நடந்து செல்ல முடியும் என்று திரைப்படத்தில் பார்த்த அன்புத் தம்பி விஜய்யை நம்பி மக்கள் வாக்களித்தார்கள். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கே மாதங்களில் 550 குற்றங்கள் நடந்துள்ளன. அதில் 200க்கும் மேற்பட்ட கொலைகள், 300க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள், 8 காவல் மரணங்கள் மற்றும் 10 ஆணவக் கொலைகள் அடங்கும். இதுதான் நீங்கள் தமிழ்நாட்டை காப்பாற்றும் லட்சணமா என கேட்க வேண்டியுள்ளது. தேர்தலுக்கு முன்னால், நண்பாஸ், நண்பீஸ், வீட்டில் அடம் பிடித்துப் பெற்றோரிடம் வாக்கைப் பெற்றுத் தாருங்கள் என்று கேட்கத் தெரிந்த முதலமைச்சர் தம்பி விஜய், அந்தச் சிறுவர்களுக்காக என்ன செய்தார். மதுரையில் கழிவுநீர்க் குட்டையில் 16 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தான். அதற்காக நியாயம் கேட்ட பெற்றோரை காவல் துறையினர் கழுத்தில் மிதித்துக் கைது செய்து இழுத்துச் செல்கிறார்கள். முதலமைச்சர் விஜய் பிரச்சாரம் செய்த வண்டலூர் அருகே 10ஆம் வகுப்பு படிக்கும் மாற்றுத்திறனாளிச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். ஆனால், அந்த விவகாரம் வெளிவராமல் இருக்க அச்சிறுமி தேர்வு எழுதப் பயந்து நாடகமாடுகிறார் என்று கூறியதுதான் இந்தத் தவெக ஆட்சி. ஒரு குழந்தைக்கு நேர்ந்த அவலத்தைக்கூட மறைக்க நினைக்கும் இரக்கமற்ற, மனிதநேயமற்ற ஆட்சியைத்தான் தம்பி விஜய் நடத்திக்கொண்டிருக்கிறார். நம்முடைய தலைவர் அண்ணன் தளபதி கூறியதைப் போல, இந்த ஆட்சியில் மின்வெட்டிற்கும் அரிவாள் வெட்டிற்கும் தான் போட்டியே நடக்கிறது. நாம் கேட்டால் ஃபியூஸைப் பிடுங்கிச் சென்றுவிடுகிறார்கள் என்ற சாக்கு போக்குக் கூறுகிறார்கள். நான்கு மாதங்களாக ஃபியூஸைப் பிடுங்கிச் செல்பவர்களைக் கூடக் கண்டுபிடிக்க முடியாத கையாலாகாத ஆட்சியாகவே இது உள்ளது. திமுக ஆட்சியில் அண்ணன் நேரு மின்சாரத்துறை அமைச்சராக இருந்தபோது இப்படி நடந்திருந்தால் விட்டுவிட்டிருப்பாரா. இந்நேரம் அவரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கபட்டிருக்கும் வேலையில்லாப் பட்டதாரிக்கு மாதம் ரூ.4,000 வழங்கப்படும் என்றீர்கள்; பணமும் வரவில்லை, தனுஷும் அரசியலுக்கு வந்துவிட்டார். பெண்களுக்கு ரூ.2,500 தருவதாகக் கூறியதும் நிறைவேற்றப்படவில்லை. திமுக ஆட்சியில் முறையாக வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித்தொகையும் இப்போது பலருக்கு நிறுத்தப்பட்டுவிட்டது. விவசாயக் கடன் ரத்து என்று அறிவித்தீர்கள். ஆனால், தண்ணீர் திறக்கும் நேரம் தெரியாமல் பயிர்கள் காய்ந்து நிற்கின்றன. இவர்களோ லண்டனுக்குச் சென்று முதலீட்டு முகாம் நடத்துவதாகக் கூறி நாடகமாடுகிறார்கள். டெல்லி நொய்டாவில் உள்ள நிறுவனத்தின் முதலீட்டைப் பெற லண்டனுக்கு ஏன் செல்ல வேண்டும். விஜய்க்கு டெல்லிக்குச் செல்ல என்ன பயம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி முதலீடு ஈர்த்திருப்பதாகக் கூறுகிறீர்கள்; ஆனால் ஊடகங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் பணமில்லை என்று கூறிவிட்டு, சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கார்களும், ரூ.7 கோடியில் புதிய அலுவலகமும், ரூ.1,200 கோடியில் புதிய சட்டமன்றக் கட்டிடமும் எதற்காக கட்ட முடிவு செய்தீர்கள். மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தம்பி விஜய், இந்த நாடகமும் ரீல்ஸ்களும் தமிழ்நாட்டில் ரொம்ப நாள் செல்லுபடியாகாது. யார் உண்மையான தீய சக்தி, யார் மக்களுக்குத் தூரமான சக்தி, யார் தீர்ந்துபோன சக்தி என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். சட்டமன்றத்தில் நான் பதில் பேசும்போது ஓடிவிடாதீர்கள் என்று எதிர்க்கட்சிகளைப் பார்த்துக் கூறிவிட்டு, கேள்வி கேட்டு முடிப்பதற்குள் அவரே ஓடிவிடுகிறார். மதுராந்தகத்தில் பேசும்போது பாஜகதான் திமுக என்கிறார். ஆனால், தேசிய சராசரியை விட 4.4% தமிழ்நாட்டின் விலைவாசி உயர்வை 5.44% உயர்த்தி சாதனையாக்கியதுதான் உங்கள் சாதனை. மின்வெட்டு, அரிவாள் வெட்டு, விலைவாசி உயர்வு இவைதான் உங்கள் ஆட்சியில் நிகழ்ந்த சாதனைகள். எங்களைப் பார்த்துப் பாஜகவின் தமிழ்நாடு பிரிவு என்று கூறுகிறீர்களே, நம்முடைய தலைவர் என்றைக்காவது பிரதமர் மோடியையோ, அமித் ஷா அவர்களையோ, பாஜகவையோ விமர்சிக்கத் தயங்கியது கிடையாது. நாடாளுமன்றத்தில் பிரதமரையும் உள்து றை அமைச்சரையும் எதிர்த்துப் போர்க்கொடி தூக்கியவர்கள் திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள்.100 நாள் வேலைத் திட்டத்தைச் சீர்குலைக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தபோது அதை எதிர்த்துப் பேசியவள் நான். அதற்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தவர் நம்முடைய முதலமைச்சர் அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின். இந்த ஆண்டு மட்டும் தமிழ்நாட்டிற்கான வேலை வாய்ப்புகள் 50% வரை குறைக்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து ஒரு வார்த்தையாவது அன்புத் தம்பி விஜய் கேட்கவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு அவர்கள் சட்டமன்றத்தில் மோடியைப் பற்றிப் பேச எழுந்தபோது, ஐயோ, அதைப் பற்றியெல்லாம் இங்குப் பேசவேண்டாம் என்று பயந்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கிய வீராதிவீரர் தான் இந்த அன்புத் தம்பி விஜய். இன்றைக்கு நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறது. மூன்று தேர்தல் ஆணையர்களில் ஞானேஷ்குமார் என்பவர் தன்னிச்சையாகச் செயல்பட்டு, 13 கோடிப் பேரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியிருக்கிறார் என 14 முறை புகார்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. நம்முடைய தலைவர் அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து தலைவர்களும் இதற்கு எதிராகப் போராடி வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் அவர்கள் இதை எதிர்த்து ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. இவர்களது ஆட்சியில் தமிழ்மொழி இன்றைக்கு மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது; தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் எனது உயிர் மூச்சு என்று கூறும் நீங்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள். தலைவர் கலைஞர் ஆட்சிக் காலத்தில்தான் காண்டூர் கால்வாய் சீரமைக்கப்பட்டு விவசாயம் செழித்தது; கூட்டுறவுப் பயிற்சி மையம் கொண்டு வரப்பட்டது. அண்ணன் தளபதியின் ஆட்சியில் அரசுக் கல்லூரிகள், புறவழிச்சாலைகள், பேருந்து நிலையங்கள், அறிவுசார் மையங்கள் அமைக்கப்பட்டன. திருப்பூரின் வளர்ச்சிக்காக ரூ.1,400 கோடியும், நகராட்சி, பேரூராட்சிகளுக்கு நூற்றுக்கணக்கான கோடி நிதியும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் வழங்கப்பட்டது. இத்தகைய நல்லாட்சி மீண்டும் மலரவும், தமிழ்நாட்டு மக்களை இந்தத் தீய சக்தியின் ஆட்சியிலிருந்து காப்பாற்றவும், அன்புத் தம்பி விஜய் அவர்களிடமிருந்து விடுவிக்கவும், உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்துச் சுகன்யாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கனிமொழி எம்.பி பேசினாா்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சா்கள் நேரு, கீதாஜீவன், எம்.எல்.ஏக்கள் மாா்க்கன்டேயன், முத்துராமலிங்கம் என்ற காதா் பாட்ஷா, மேயா் ஜெகன் பொியசாமி மாநில வா்த்தக அணி இணைச்செயலாளா் உமாிசங்கா், தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், ஓன்றிய செயலாளர்கள் இளையராஜா, ராமசாமி, செந்தில்குமாா், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், நிா்மல்ராஜ், ஜெயக்குமாா், தலைமை செயற்குழு உறுப்பினா் செந்தூா்மணி உள்பட தூத்துக்குடி வடக்கு தெற்கு மாவட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article எதிா்கால தலைமுறையினா் நலன் நமக்கு முக்கியம் என்பதை அனைவரும் உணா்ந்து செயல்பட்டு திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் தாராபுரத்தில் மேயா் ஜெகன் பொியசாமி வாக்கு சேகாித்தாா்
Next Article தூத்துக்குடி தலைமை தேர்தல் ஆணையா் பதவி விலக கோாி வடக்கு மாவட்ட காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

You Might Also Like

தூத்துக்குடி

தூத்துக்குடி பாத்திமா நகரில் மாபெரும் அசனப் பெருவிழா : முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பங்கேற்று அசன விருந்தை துவக்கி வைத்தார். 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் கனிமொழி எம்.பி தலைமையில் நடைபெற்றது

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் பெரியார் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து திமுக தொடக்க விழாவையொட்டி கொடியேற்றி இனிப்பு வழங்கினார் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி 

By Dinapuratchi
அரசியல்

வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள மாநகராட்சி தயாராக இருக்கிறது. மேயா் ெஜகன் பொியசாமி தகவல்

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?