தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சீரான குடிநீர் விநியோகம். மேயர் ஜெகன் பொியசாமி தகவல்
தூத்துக்குடி தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளதால் வடகிழக்கு பருவமழை இன்னும் துவங்காத நிலையில் தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு நிலவி வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் குடிநீருக்காக பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர் பல்வேறு பகுதிகளில் ஐந்து நாட்கள் பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது குறிப்பாக தூத்துக்குடி மாநகருக்கு குடிநீர் பகுதியான தாமிரபரணி ஆற்றுப்படுகையில் நீர் வரத்து முற்றிலும் குறைந்துள்ளது. இந்நிலையில் நேரடியாக தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டனா்.
மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி கூறுகையில் மக்கள் நலன் தான் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு தாமிரபரணி ஆற்றுப்படுகையில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு ஹிட்டாச்சி வாகனம் மூலம் குழி தோண்டப்பட்டு அதன் மூலம் நீர் எடுக்கப்பட்டு வல்லநாடு சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்பட்டு மாநகராட்சி பகுதியில் உள்ள 35 நீர் தேக்க தொட்டிகள் மூலம் மக்களுக்கு குடிநீர் வினியோகம் சூழற்சி முறையில் விநியோக நேரத்தை தொிவிக்கப்பட்டு தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டு வருகிறது தொடர்ந்து 60 வார்டுக்கும் எந்த விதமான தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் வேளையில் தூத்துக்குடி மாநகராட்சியில் மட்டும் குடிநீர் தட்டுப்பாடின்றி தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் தங்கு தடையின்றி குடிநீர் வழங்கி வருகிறோம் எல்லா தரப்பினரும் முறையாக குடிதண்ணீரை பயன்படுத்தி அருகில் உள்ள மற்ற ஊா்களை சோ்ந்தவா்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் மாநகரில் எல்லா பணிகளும் அனைத்து தரப்பினருக்கும் ஏற்ப குறைகள் நிறைவான பணிகள் இரண்டையும் தங்களது கருத்துக்கள் மூலம் மக்கள் தொிவித்து வருகின்றனா் அதற்கும் முக்கியத்துவம் கொடுத்து பணிகள் செய்கிறோம் நம்முடைய காலத்தை மட்டும் பற்றி சிந்திக்காமல் எதிா்கால தூத்துக்குடி மாநகராட்சி நம் மாநகராட்சி என்ற உணா்வு பூா்வமான சிந்தனையோடு செயல்படுவதற்கு எல்லோரும் முழுமையான ஓத்துழைப்பை வழங்க வேண்டும் தூத்துக்குடி மாநகராட்சியை யொட்டியுள்ள பகுதியான மாப்பிள்ளையூரனி உள்ளிட்ட பல கிராமங்களுக்கு பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்பதையும் கருத்தில் கொண்டு நமது மாநகராட்சி பகுதி மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்கி வருகிறோம் என்று கூறினாா்.