தூத்துக்குடியில் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு இரத்ததானம்
செய்த 26 கொடையாளர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
உலக குருதி கொடையாளர் தினத்தையொட்டி இன்று (14.06.2025), தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் , மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் இரத்ததானம்
செய்த 26 கொடையாளர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.
கீதா ஜீவன் தெரிவித்த்தாவது : ஒவ்வொரு வருடமும் ஜீன் 14-ம் தேதி உலக குருதி கொடையாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், இன்று உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக ஆண்டுக்கு மூன்று முறை அல்லது அதற்குமேல் இரத்ததானம் செய்யும் கொடையாளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. பொதுவாக இரத்ததானம் செய்வது நல்லது, மேலும் ஆண்டுக்கு மூன்று முறை இரத்ததானம் செய்யலாம் என்று இளைஞர்களிடையே ஊக்கப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்வு நடைபெற்று வருகிறது.
பொதுவாக, நீரிழிவு நோய் மற்றும் சில குறிப்பிட்ட நோய்கள் ஏற்பட்ட பின்னர் இரத்ததானம் செய்யமுடியாது, மேலும், அந்த இரத்தம் உபயோகமற்றதாகி விடுகிறது. இளம் வயதில் உள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் இரத்ததானம் செய்யும் பொழுது பல உயிர்களை காப்பற்றுவதற்கு உதவிகரமாக உள்ளது. இரத்ததானம் செய்வது என்பது உயிர்தானம் செய்தவதற்கு சமமாகும். எனவே, இரத்ததானம் என்பது மிக முக்கியமானதாகும். இன்றைய காலகட்டத்தில் அதிகமான நபர்கள் இரத்ததானம் செய்தவதற்கு முன் வருகிறார்கள்.
இரத்ததானம் செய்வதற்கு முன் வருகின்ற கொடையாளர்களுக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, இரத்ததானம் செய்வதற்கு அதிகமான இளைஞர்கள் முன்வர வேண்டும், இரத்ததானம் செய்யுங்கள்! நமது உடலுக்கும் நல்லது! பல உயிர்களை காப்பற்றுகிறவர்களாக உங்கள் இரத்ததானம் அமையும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்தார்.
முன்னதாக, உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு இரத்ததானம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் பி.கீதா ஜீவன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) புவனேஷ்ராம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.சிவக்குமார், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை துணை முதல்வர் கலைவாணி, உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, இரத்தவங்கி மருத்துவ அலுவலர் சாந்தி, செவிலியர் கண்காணிப்பாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.