தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தில் உள்ள விவிடி நினைவு மேல்நிலைப் பள்ளியின் வளாகத்தில் கேவிகே சாமி நினைவு மண்டம் அமைந்துள்ளது. கேவிகே சாமி நெல்லை தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த போது திமுக மாவட்ட செயலாளராக இருந்துள்ளார் அண்ணா, கலைஞர், நெடுஞ்செழியன், எம்ஜிஆர், பெரியார், எம்ஆர் ராதா, ஆகியோருக்கு உண்மை விசுவாசியாக இருந்தவர் ஏழை தொழிலாளர்களின் பாதுகாவலர் இருந்துள்ளார்.
இந்நிலையில் கே வி கே சாமியின் 70வது நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவு மண்டபத்தில் பள்ளியின் தாளாளர் பிரம்மானந்தம் தலைமையில் பள்ளியின் தலைமை ஆசிரியை கணக்கரத்தின மணி பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பள்ளியின் ஆசிரியா்கள் அவரது திரு உருவ படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து நினைவு அஞ்சலி செலுத்தினார்கள்.