தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் 40வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது விழாவிற்கு முன்னாள் மாணவரும், பனிமய மாதா பேராலய அதிபர் மற்றும் பங்குத்தந்தையுமான அருட்தந்தை ஜான்செல்வம் தலைமை தாங்கினார். எட்ைடயாபுரம் முதுநிலை வருவாய் ஆய்வாளரும், பள்ளியின் முன்னாள் மாணவருமான பால்ராஜ் முன்னிலை வகித்தார்
விழாவின் சிறப்பு விருந்தினராக ஏஞ்சலோ ஈஸ்டர்ன் ஷிப் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் 2-வது பொறியாளரும் , பள்ளியின் முன்னாள் மாணவருமான ராகுல், சங்கத்தின் மூத்த உறுப்பினரான தெற்கு இரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய கால்பந்து விளையாட்டு வீரரான ஆர்லாண்டோ ராயன் ஆகியோர் கலந்து கொண்டு கொண்டனர்.
முன்னதாக ஆண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையே அருட்சகோதரர் யேசுதாசன் நினைவு கால்பந்தாட்ட போட்டி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது இந்த போட்டியில் 10 அணிகள் பங்கு பெற்றனர் இதில் சிறப்பாக விளையாடி வஉசி பள்ளி கோவில்பட்டி மற்றும் பியர்ல்ஸ் பள்ளி ஆறுமுகனேரி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இறுதி போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் பியர்ல்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. முதலிடம் பிடித்த அணிக்கு, சகோ. யேசு தாசன் நினைவு கோப்பையும் ரூ.15,000ம் இரண்டாமிடம் பிடித்த அணிக்கு, தாமஸ் மஸ்கர்னாஸ், சம்மனசு அம்மாள் மஸ்கர்னாஸ் நினைவாக ரூ.7,000ம் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் இருதயராஜ் மஸ்கரானாஸ், இயக்குனர் பெர்டினான்ட், உதவி இயக்குனர்கள். ஜான்பால், ராபர்ட் , செயலாளர் ஜெனாப், பொருளாளர் ஞானசேகரன் ஆகியோர் செய்து இருந்தனர்.
இந்த விழாவில் முன்னாள் மாணவர்கள், முன்னாள், இந்நாள் ஆசிரியர்கள் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.