தூத்துக்குடி தாமிரபரணி வடகால் பாசன பொட்டைகுளம் நீரினை பயன்படுத்துவோர் சங்கம் ஆஸ்கர் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: குலையன்கரிசல் கிராமம், பொட்டைகுளத்தில் தொடர்ந்து அரசின் இலவச வண்டல் மண், கரிசல் மண் திட்டத்தை மீண்டும் வழக்கம் போல் செயல்படுத்த, கலெக்டரிடம் மனு அளித்தோம். இதனை தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில், 3 நாட்கள் மட்டுமே பொதுப்பணித்துறை ஸ்ரீவைகுண்டம் வடகால் பிரிவு சார்பில் இலவசமாக வண்டல், கரிசல் மண் எடுக்க அனுமதி அளித்தனர். அதன் பிறகு, மீண்டும் வண்டல் மண் பொட்டைகுளத்தில் விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினர். வண்டல் மண் எடுக்கக்கூடாது என்று தெரிவித்து விட்டனர். இதனால், விவசாய பயன்பாட்டிற்கு வண்டல் மண் எடுக்க முடியாத நிலையில், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து, விவசாயிகளுக்கு எதிராக பொதுப்பணித்துறையினர் செயல்பட்டு வருவதாகவும், இதுகுறித்து கலெக்டர் விசாரணை நடத்தி, பொட்டைகுளத்தில் விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். தொடர்ந்து இங்கு வண்டல் மண் விவசாயி பயன்பாட்டிற்கு தடங்கல் இல்லாமல் எடுத்துச் செல்ல கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்று, ஆஸ்கர் தலைமையில் வந்த நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினர் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.
பொட்டைகுளத்தில் விவசாய பயன்பாட்டிற்கு வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் கோாிக்கை