தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலையில் ஓருங்கிணைந்த காங்கிரஸ் கட்சி மாவட்ட ஆராய்சி துறை தலைவர் ஆடிட்டா் சிவராஜ் மோகன் தூத்துக்குடி மாநகா் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவா்கள் இம்மானுவேல் மனிராஜ், ஆகியோா் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனா். கருப்பு சிவப்பு சால்வை அணிவித்து அனைவரையும் வரவேற்றாா்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் அன்பழகன், மாநகராட்சி மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமாா், விவசாயி தொழிலாளா் அணி அமைப்பாளா் சித்திரை செல்வன், மாவட்ட சிறுபான்மை அணி துணை தலைவர் பெனில்டஸ், மாநகர தொழிலாளா் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, மற்றும் மணி, முரளிதரன், பாஸ்கா், செந்தில்குமாா், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி காங்கிரஸ் நிா்வாகிகள் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்