தூத்துக்குடி சட்ட உாிமைகள் கழக நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது முதலில், பெண்களின் கண்ணியத்தை பாதிக்கும் வகையில் அல்லது இரட்டை அர்த்தம் ஏற்படும் வகையில் யார் பேசினாலும் அது ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர் உதயநிதி ஸ்டாலினாக இருந்தாலும், முதலமைச்சர் விஜயாக இருந்தாலும், வேறு எந்த அரசியல் தலைவராக இருந்தாலும் தவறு தவறுதான். அதே நேரத்தில், ஒரு பேச்சுக்காக உடனடியாக கைது செய்வதும் சரியான அணுகுமுறை அல்ல. சட்டப்படி நோட்டீஸ் அனுப்பலாம், விளக்கம் கேட்கலாம், விசாரணை நடத்தலாம். கைது என்பது கடைசி வழிமுறையாக இருக்க வேண்டுமே தவிர, முதல் நடவடிக்கையாக இருக்கக் கூடாது. இன்று தமிழகத்திற்கு மிக முக்கியமான பிரச்சினை காவிரி நதிநீர் உரிமை. இந்த நேரத்தில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் அரசியல் மோதலில் நேரத்தை செலவிடாமல், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, தமிழ்நாட்டின் உரிமைக்காக ஒருமித்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். அரசியல் சண்டையால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. பாதிக்கப்படுவது தமிழ்நாட்டின் நலன்தான். சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒரு சட்டம், ஆளுங்கட்சித் தலைவருக்கு ஒரு சட்டம் என்ற நிலை உருவாகக் கூடாது. சட்டம் பழிவாங்கும் கருவியாக அல்ல, நீதியை நிலைநாட்டும் கருவியாக செயல்பட வேண்டும். தவறான பேச்சை நாங்கள் ஆதரிக்கவில்லை. தேவையற்ற கைதையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. காவிரி போன்ற மாநில உரிமை பிரச்சினைகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். மக்களின் பிரச்சினைகளை விட அரசியல் மோதலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமமாகவும், பாரபட்சமின்றியும் செயல்பட வேண்டும். அரசியல் சண்டை வேண்டாம். தமிழகத்தின் உரிமையை காப்பாற்ற ஒன்றுபடுங்கள். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள். என்று சட்ட உாிமைகள் கழக நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.
உதயநிதி ஸ்டாலின் பேசியது சரியா? கைது செய்தது சரியா? –சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்ேடாபா் அறிக்கை