தூத்துக்குடி தமிழகத்தில் பெருகி வரும் தொழிற்சாலைகள் மற்றும் அரசுத் திட்டங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு 90சதவீதம் வேலைவாய்ப்பு முன்னுரிமை அளிக்கும் வகையில் சிறப்புச் சட்டத்தை உடனடியாகக் கொண்டுவர வேண்டும் என மக்கள் நல கூட்டமைப்பு சார்பில் கலெக்டாிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலாளர் அசன் தலைமையில் அமைப்பின் நிர்வாகிகள் கலெக்டா் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது இந்தியாவிலுள்ள பல மாநிலங்கள் தங்கள் மாநில இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்கும் வகையில் சட்டங்களை இயற்றியுள்ளன. குறிப்பாக, ஆந்திர மாநிலத்தில் 2019-ம் ஆண்டு 75 சதவீத வேலைவாய்ப்பை உள்ளூர் மக்களுக்கு உறுதியளித்துள்ளது. தமிழகத்தில் செயல்படும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசுச் சலுகை மற்றும் நிலம் பெறும் நிறுவனங்களில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளில் குறைந்தபட்சம் 90சதவீத பணியிடங்களைத் தமிழக இளைஞர்களுக்கு வழங்கும் சிறப்புச் சட்டத்தை நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும். உள்ளூர் இளைஞர்களிடம் தேவையான தொழில்நுட்பத் தகுதி இல்லாத பணிகளுக்கு, அவர்களுக்குத் தகுந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை அரசு மற்றும் நிறுவனங்கள் வழங்கிப் பின்னர் அப்பணிகளில் நியமிக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளனா்.
நிகழ்ச்சியில் தமிழர் விடியல் கட்சி மாவட்ட பொறுப்பாளா் சந்தனராஜ் பாண்டியன், திராவிடர் கழக மாவட்டஇளைஞர் அணி தலைவர் பிரசாத், புரட்சி பாரதம் இளைஞர் அணி முன்னனி மாவட்ட செயலாளர் சுஜித், தமிழ்புலிகள் மண்டல செயலாளர் தாஸ், ஆதித்தமிழர் கட்சி மண்டல செயலாளர் சுரேஷ் வேலன், தமிழா் முன்னேற்ற கழக செயலாளர் ராஜா, பொியாா் திராவிட கழக மாவட்ட செயலாளர் மைக்கேல், மனித நேய ஜனநாயக கட்சி மாவட்ட துணை செயலாளர் ஜாகிா் உசேன் பொருளாா் அகமது அலி, தொகுதி செயலாளர் இப்ராஹிம், இளைஞர் அணி துணைசெயலாளர் பாட்ஷா ஊடக பிாிவு செயலாளர் யூசுப் மெகா்அலி, உள்பட பலா் கலந்து கொண்டனர்.
தமிழக இளைஞர்களுக்கு 90 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்க சட்டம் மக்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தல்