தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி முப்பெரும் விழா மேயர் பெயர் காணவில்லை. பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை தவறாக சொன்ன அமைச்சர் ஸ்ரீநாத் நடுநிலைப்பள்ளி விழாவில் ஆங்கிலம் மற்றும் தமிழில் பேசியதால் முழுமையாக மாணவ மாணவிகள் புரிய முடியவில்லை.
தூத்துக்குடி ஜின் பேக்ட்டரி ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவிற்கு மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா தலைமை தாங்கினார். பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது
விழாவில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசு சான்றிதழ் வழங்கி பேசுகையில் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி கொஞ்ச நாளாக உங்களை சந்திக்க வேண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டார்கள் நான் இன்று கலந்து கொண்டேன் இந்த ஸ்கூலில் 220 பேர் படிப்பதாக கேள்விப்பட்டேன் உடனடியாக அருகில் இருந்த நபர்கள் 720 பேர் என்று கூறியவுடன் அமைச்சர் ஸ்ரீநாத் மீண்டும் 720 பேர் படிக்கிறார்கள் என்று பேசினார் இந்த ஆண்டு மட்டும் 200 பேர் புதியதாக சேர்ந்துள்ளதாக கூறினார்கள் இங்கு விதை விதைக்கப்பட்டுள்ளது பரதநாட்டிய நிகழ்ச்சி கலை நிகழ்ச்சிகள் நன்றாக இருந்தது பசங்களா நீங்கள் முதலமைச்சா் ஜோசப் விஜயின் ஜனநாயகன் படத்தை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் ஆனால் உண்மையான ஜனநாயகனை நீங்கள் சட்டசபையில் நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் அது உங்களுக்கு மகிழ்ச்சி அதுபோல எனக்கும் மகிழ்ச்சி ஒன்னும் இல்ல கடுமையாக உழைத்தால் நேர்மையாக இருந்தால் திட்டமிட்டு சரியாக செய்தால் முதல்வராகலாம் என்பது நமது தலைவர் தான் உதாரணம் சுமாரா படிக்கிறாரு சுமாரா படிக்கிறாரு சுமாரா டான்ஸ் ஆடுறாரு இப்படி சுமார் சுமார் ன்னு சொல்லிக்கிட்டு இருந்தவங்களை உடைத்து நம்ம தளபதி மாதிரி சூப்பரா இருக்காரு சூப்பரா இருக்காரு சூப்பர் ஸ்டார் ஆகவே மாறிவிட்டார் அப்படி ஆகலாம் தலைவர் மாதிரி நீங்களும் நல்லா படிக்கணும் கடுமையா உழைக்கணும் மீண்டும் உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுபவர் ஸ்ரீநாத் வெற்றி. என்று அமைச்சர் ஸ்ரீநாத் பேசினார்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தப் பள்ளியில் இந்த ஆண்டு 200 பேர் புதியதாக மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றதாக அமைச்சர் கூறினார் ஆனால் எதனடிப்படையில் புதியதாக 200 மாணவர்கள் சேர்ந்தார்கள் என்பதை அருகில் இருந்த ஆணையர் ப்ரியங்கா கடைசி வரை சொல்லவில்லை பள்ளியில் அனைத்து கட்டமைப்பு வசதிகளும் மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது. அதுபோல மாநகராட்சி பள்ளி விழாவில் மாநகராட்சி மேயர் ஜெகன்பொியசாமி பெயர் இடம்பெறவில்லை அழைக்கவும் இல்லை. பள்ளியிலிருந்து பெற்றோர்களுக்கு குழந்தைகளுக்கு பள்ளி நிர்வாகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள குறுஞ்செய்தியில் பள்ளியில் முப்பெரும் விழா 22ம் தேதி சனிக்கிழமை காலை நடைபெறும் விழாவில் மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் மாநகராட்சி ஆணையர் கலந்து கொள்கிறார் ஆகையால் பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொள்ள வேண்டும் என பள்ளி நிர்வாகத்தால் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது ஆனால் விழாவில் மாநகராட்சி மேயர் பெயர் இடம்பெறாமல் மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் எதனடிப்படையில் குறுஞ்செய்தி அனுப்பினார் என்று தெரியவில்லை அழைப்பிதழிலும் மாநகராட்சி மேயர் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல மேடையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் ஸ்ரீநாத் கேடயம் வழங்கிக் கொண்டிருந்தார் மேடைக்கு கீழே பள்ளி ஆசிரியர் ஒருவர் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கேடயம் வழங்கிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாக்ஸ்: தமிழகத்தில் எந்தகட்சி ஆட்சி செய்தாலும் மாவட்ட அளவில் நடைபெறும் அரசு விழாக்களில் சட்டமன்ற உறுப்பினா்கள் பெயா்கள் பாரபட்சமின்றி இடம் பெறும் விழாவில் ஆளும் கட்சி உறுப்பினா்கள் கலந்து கொள்வதும் எதிா்கட்சியினா் புறக்கனிப்பதும் சில சமயங்களில் எதிா்கட்சி உறுப்பினரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்வது நடைமுறையில் இருந்து வருவது வழக்கம் மாநகராட்சிபகுதியில் நடைபெறுகின்ற எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சிக்கு மேயா் துணை மேயா் அந்த பகுதி மாமன்ற உறுப்பினா் 3 பேரையும் கண்டிப்பாக அழைக்க வேண்டும் அது தான் அவா்களின் பாணியிலேயே சொல்ல வேண்டும் என்றாால் ஜனநாயக நாட்டில் ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை அழைக்காமல் உண்மையான ஜனநாயகத்தை சட்டமன்றத்தில் நீங்கள் நேரடியாக பாா்க்கிறீா்கள் என்ற ாீல்ஸ் அமைச்சாின் பேச்சு எந்த கணக்கில் சோ்ப்பது. என்று விடை தொியாமல் மாநகராட்சி அலுவலா்களை பலா் என்ன வேடிக்கை இது என்று கேட்கும் நிலை உருவாகியுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி விழாவா ஜனநாயகன் படவிழாவா மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்த அமைச்சா் ஸ்ரீநாத்