தூத்துக்குடி ஆல்கன் டிரஸ்ட் சார்பில் 431 வது வார மரம் நடும் நிகழ்ச்சியும் 10ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சியாக, தூத்துக்குடி பி அண் டி காலணி 12 வது தெரு மேற்கு பகுதியில், விளையாட்டு மைதானம் அருகே உள்ள பகுதியில் ஆல்கன் டிரஸ்ட் நிறுவனா் வக்கீல் மோகன்தாஸ் சாமுவேல் தலைமையில் மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்றுகள் நட்டி கூறுகையில் வீட்டிற்கு ஒரு மரம் வளா்ப்போம் நாட்டிற்கு தேவையான மழை வளத்தை பொழியச்செய்யவும் மாசுஇல்லாத மாநகராட்சி பகுதியை உருவாக்க அனைவரும் முன்னெடுப்புடன் மரம் வளர்க்க வேண்டும் என்று கூறினாா்.
நிகழ்ச்சியில் தாசில்தாா் செல்வக்குமாா், தெற்கு மாவட்ட திமுக தொழிலாளா் அணி துணை அமைப்பாளர் அந்தோணி தனுஷ்பாலன், மாவட்ட திமுக பிரதிநிதி நாராயணன், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் வேல்பாண்டி, தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க மாநில தலைவர் மருதபெருமாள், செயலாளர் ஜெயராஜ், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா், உள்பட பலர் கலந்து கொண்டனா்.