தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அன்னையின் சொரூப பவனி வரும் 5ம் தேதி நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் தினமும் சிறப்பு திருப்பலிகள், மறையுரை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 8வது நாளில் நடைபெற்ற திருவிழாவில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அனிதாராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு ஆலய பங்குதந்தை ஜான் செல்வத்திடம் அனிதாராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ ஆசி பெற்றார். அதனைத் தொடர்ந்து திமுக நிர்வாகி அஜிதா ஆக்னல் ஏற்பாடு செய்திருந்த அன்னதான நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் திமுக மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரிசங்கர், சாத்தான்குளம் முன்னாள் யூனியன் கவுன்சிலர் சுதாகர், கானம் பேரூராட்சி முன்னாள் தலைவர் செந்தமிழ் சேகர், அஜிதா ஆக்னல், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வக்குமார், மீனவரணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரொட்ரிக்கோ, தொழிலாளர் அணி அமைப்பாளர் அந்தோணி தனுஷ்பாலன், மாநகராட்சி கவுன்சிலர் ரெங்கசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பால்துரை, தங்கதுரைபாண்டியன், புன்னக்காயல் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சோபியா, எடிசன், போக்குவரத்து கழக தொமுச நிர்வாகி முத்துராஜ், ஒன்றிய நிர்வாகிகள் ராமச்சந்திரன், நெல்சன், சுதாகர், கனகராஜ், அனிட்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்