தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது விசாரணை கைதிகளை கொலை செய்கிறார்கள் போராடும் மாணவர்களை துன்புறுத்துகிறார்கள் பத்திரிகையாளர்கள் அச்சுறுத்துகிறார்கள் எதிர்க்கட்சியினரை ஒடுக்குகிறார்கள். இது தமிழ்நாடு காவல்துறையா தவெகவின் கூலிப்படையா என பொதுமக்களே கேள்வி எழுப்பும் அளவுக்கு தறிகெட்டு சென்று கொண்டிருக்கிறது தவெக காவல்துறையின் போக்கு தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்ப்பதாக முதல்வர் விஜய் கூறிய நிலையில், சென்னையில் நீட் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தும் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தி கைது செய்வது ஏன்? நீட் தேர்வை எதிர்ப்பதாக கூறும் முதல்வர், போராட்டத்திற்கு இடம் ஒதுக்கி கொடுத்து ஜனநாயகப் பூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் போராட்டம் நடத்துவதற்கான வாய்ப்பு வழங்காதது ஏன்? தமிழ்நாடு காவல்துறை முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இருக்கிறதா அமித்ஷா கட்டுபாட்டில் இருக்கிறதா…? என்று கேள்விகளை எழுப்பி வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.
விசாரணை கைதிகளை கொலை செய்கிறார்கள் போராடும் மாணவர்களை துன்புறுத்துகிறார்கள் பத்திரிகையாளர்கள் அச்சுறுத்துகிறார்கள் எதிர்க்கட்சியினரை ஒடுக்குகிறார்கள். இது தமிழ்நாடு காவல்துறையா தவெகவின் கூலிப்படையா முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கேள்வி