தூத்துக்குடி மாவட்டத்தில் மாநகர் பகுதியில் உள்ள இனிகோ நகர் கடற்கரையில் தான் அதிக எடை கொண்ட நண்டு. இறால் கிடைக்கும் இங்கு கிடைக்கும் நண்டு மற்றும் இறால் அதிக ருசி கொண்டதாக இருக்கும் இங்கு பிடிக்கப்படும் நண்டு இறாலுக்கு அதிக விலை கிடைக்கும் இதனால் மீனவர்கள் பயனடைந்து வந்தனர் குறிப்பாக நண்டு இரண்டு கிலோ முதல் நான்கு கிலோ வரை இந்த இனிகோ நகர் கடற்கரையில் கிடைத்து வந்தது. மீனவர்களின் வாழ்வாதாரம் அதன் மூலம் பலன் அடைந்து வந்தனர்.
இந்நிலையில் தொடர்ந்து அனல் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வந்தாலும் அனல் மின் நிலையத்திலிருந்து கழிவு நீர் மற்றும் சாம்பல் கலந்த கழிவு நீர் அனல் மின் நிலையத்தின் பின்புறமாக கடல் பகுதிக்கு தினசரி திறந்து விடப்படுகிறது. அந்தக் கழிவு நீர் சாம்பல் கலந்த கழிவு நீர் கடலில் கலப்பதால் மீன் உற்பத்தி குறைந்து மீன் இனமே அழிந்து வருகிறது. குறிப்பாக இனிகோ நகர் கடற்கரை அனல் மின் நிலையத்தின் பின்பகுதியில் உள்ளது இதனால் இனிகோ நகர் கடற்கரைப் பகுதியில் கிடைக்கக்கூடிய நண்டு. இறால் முற்றிலும் அழிந்துவிட்டது..
இது பற்றி மீனவர் ஒருவர் கூறுகையில் கடந்த எட்டு ஆண்டுகளாக இனிகோ நகர் கடற்கரை பகுதியில் கிடைத்து வந்த நண்டு மற்றும் இறால் முற்றிலும் தற்போது அழிந்து விட்டது அங்கு எதுவும் கிடையாது இங்கு பிடிக்கப்படும் நண்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது மீனவர்களின் வாழ்வாதாரமும் நன்றாகவே இருந்தது அதுவும் இனிகோ நகர் கடற்கரை நண்டு மட்டும் இறால் என்றால் மக்கள் போட்டி போட்டு வாங்கி வந்தனர் தற்போது அனல் மின் நிலையத்திலிருந்து வெளியே வரும் கழிவு நீர் மற்றும் சாம்பல் கலந்த கழிவு நீரால் நண்டு மற்றும் இறால் முற்றிலும் இல்லாத சூழ்நிலை உருவாகிவிட்டது இனிகோ நகர் கடற்கரை பகுதியில் இருந்து முயல் தீவு வரை கடல் பகுதி சிமெண்ட் தளம் போல அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியே வந்த சாம்பல் கழிவுகளால் கடல் பகுதி தற்போது அந்த சூழ்நிலையில் உள்ளது இப்போது நாங்கள் இறால் பிடிப்பதற்கு ஏர்வாடி கடல் பகுதிக்கு தான் சென்று வருகிறோம். அரசின் சார்பில் ஆறு மாதத்திற்கு ஒரு முறை அனல் மின் நிலையத்திலிருந்து கழிவு நீர் மற்றும் கழிவு சாம்பல் கலந்த நீர் வெளியே வருகிறதா கடல் பகுதியில் விடப்படுகிறது என்று ஆய்வு செய்ய அதிகாரிகள் வருகிறார்கள் பெயரளவுக்கு படகில் சென்று ஆய்வு செய்துவிட்டு ஒரு மணி நேரத்தில் திரும்பி விடுகிறார்கள் முறையான முறையில் அதிகாரிகள் ஆய்வு செய்வது கிடையாது இதனால் தான் தற்போது எங்களின் வாழ்வாதாரம் இழந்து நாங்கள் நிற்கிறோம் அதிகாரிகள் சரியான முறையில் ஆய்வு செய்திருந்தால் அனல் மின் நிலையத்திலிருந்து வெளியே வரும் கழிவுநீர் மட்டும் சாம்பல் கலந்த கழிவுநீர்கடல் பகுதியில் விடாமல் இருந்திருப்பார்கள் தடுத்திருக்க முடியும் தற்போது மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் சிதைந்து உள்ளது குறிப்பாக இனிகோ நகர் கடற்கரை பகுதியில் நண்டு மற்றும் இறால் பிடித்த மீனவர்கள் தற்போது அதை விட்டுவிட்டு மீன் பிடிப்பதற்கு சென்று வருகிறோம் ஒரு சிலர் மட்டும்தான் தற்போது இனிகோ நகர் கடற்கரை பகுதியில் ஓரளவுக்கு கிடைக்கும் நண்டு பிடித்து வருகிறார்கள் ஆகையால் இனிமேலாவது தமிழக அரசு முறையான முறையில் ஆய்வு செய்து சட்டத்துக்கு புறம்பாக அரசு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட தெர்மல் நகரில் உள்ள அனைத்து அனல் மின் நிலையத்திலிருந்து வெளியே வரும் கழிவு நீர் மற்றும் சாம்பல் கலந்த கழிவு நீர் கடலில் கலப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும் என்பதுதான் மீனவர்களின் கோரிக்கையாகவே உள்ளது தமிழக அரசு அதனை நிறைவேற்ற வேண்டும் அதுபோல மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் சரியான முறையில் கவனம் செலுத்த வேண்டும் உடனடியாக உயர்மட்ட அதிகாரிகளை நியமித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று மீனவர்கள் கூறுகின்றனர்