தூத்துக்குடி அதிமுகவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அதிமுக அமைப்புச் செயலாளரும் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் சென்னை தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்ற வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகளின் கலந்தாய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டத்தின் போது அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி அவா்களை வரவேற்று பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார். நிகழ்ச்சியின் போது தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனா்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் சென்னையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.