தூத்துக்குடி உலகப் புகழ்பெற்ற பணிமயமாதா பேராலயத்தின் திருவிழா வருகிற 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது பனிமய மாதா ஆலய திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான பந்தல் ஆசீர்வாத திருவிழா அன்று ஆலயத்தின் எதிர்புறம் உள்ள பகுதியில் சிறப்பு நற்கருணை திருப்பலி நடைபெறும். இந்த இடத்தில் கற்களும் மணல்களும் இருந்ததால் பக்தர்கள் அமர்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர். அந்த இடத்தில் நவீன மயமாக்குவதற்கு யாரும் முன் வரவில்லை.
இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியிடம் இதுகுறித்து பனிமயமாதா ஆலய நிர்வாகத்தினர் கோரிக்கை வைத்தனர். அப்போது மேயர் ஜெகன் பொியசாமி கண்டிப்பாக நான் அந்த இடத்தை அழகுப்படுத்தி தருகிறேன் என்று உறுதி அளித்தார். அதன்படி சுமாா் 80 லட்சம் மதிப்பில் பழைய துறைமுகம் முதல் பனிமயமாதா ஆலயம் வரை தார் சாலையும் சாலையின் இருபுறமும் ஃபேவர் பிளாக் சாலையும் அமைக்கப்பட்டது. மேலும் நற்கருணை ஆசீர் நடைபெறும் பகுதியில் அசுத்தமாகவும் மது போதையில் மது பிரியர்கள் அங்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வந்தனர் இதனால் அந்த இடத்தில் முழுவதும் பேவர் பிளாக் கல் அமைக்க முடிவு செய்யப்பட்டு மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி ஏற்பாட்டில் பேவர் பிளாக்கல் அமைக்கப்பட்டு சாலை அமைக்கப்பட்டது.
இதனையடுத்து பனிமயமாதா ஆலய திருப்பலி மற்றும் பாராட்டு விழாவில் மேயா் ஜெகன் பெரியசாமிக்கு பங்குத்தந்தை ஜான்செல்வம் சால்வை அணிவித்து பனிமய மாதா நினைவு பரிசை வழங்கி பாராட்டி பேசுகையில் இந்த இடத்தில் நாம் சாலை அமைப்பதற்காக பல முயற்சிகள் பல்வேறு நபர்கள் போராடினார்கள் ஆனால் அது வெற்றி கிடைக்கவில்லை ஆனால் இன்று உங்கள் முன் அமர்ந்துள்ள மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி என்னால் முடியும் என்று அவர் செய்து கொடுத்துள்ளார் நாம் வைத்த கோரிக்கைகள் எல்லாம் கனிவாக கேட்டு அறிந்து செய்துள்ளார் நாம் என்றும் இந்த உதவிய மறக்க கூடாது நாம் என்றும் அவருக்கு துணையாக இருக்க வேண்டும் மாநகராட்சியில் பல மேயர்கள் இருந்தார்கள் யாரும் அதனை செய்ய முன்வரவில்லை ஆனால் இந்த மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமிக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது அவரது முயற்சிக்கு நாம் முழு மனதுடன் என்றும் தொடர்ந்த அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் அதுபோல நமது பனிமய மாதா ஆலயத்தின் கொடி மரம் அருகில் உள்ள மின் விளக்கு எரியாமல் உள்ளது அதுபோல தென்புறமும் ஒரு விளக்கு எரியாமல் உள்ளது இரண்டு மின்விளக்குகளையும் உடனடியாக ஏறிவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மேயர் ஜெகன் பொியசாமி உறுதியளித்துள்ளார். மென்மேலும் பல பதவிகள் அவர் பெற வேண்டும் அதற்கு நாம் என்றும் உறுதுணையாக செய்த நன்றியை மறவாமல் இருக்க வேண்டும் என்று பேசினாா்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மைச் செயலாளர் அருட்தந்தை பிரதீபன். உதவி பங்கு தந்தை ஜெரால்டு. கவுன்சிலா் ரிக்டா, களப்பணியாளர் மைக்சன். பாண்டியபதி பரதநல சங்க தலைவர் இன்னாசி. பொருளாளர் ஜான். மரியாவின் இயக்கம் மெரின்டோ. எடிசன். பெல் மேன். ஆக்னல். மற்றும் சேவியா் வாஸ், ரம்போலா, ஆா்தா் மச்சாது, பிரபாகா், உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்