தூத்துக்குடி மதர் சமூக சேவை நிறுவனம் கடந்த 21 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த தொண்டு நிறுவனத்தின் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்று நடுதல், மரக்கன்றுகள் வழங்குதல், நெகிழி ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி வருகிறார்கள். மேலும் இதன் இயக்குனரான கென்னடி தூத்துக்குடி மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினராக இருந்து வருகிறார். சுற்றுச்சூழலை பாதிக்கும் கோனோ கார்பஸ் மற்றும் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். மரங்களின் அளவு 5% குறைவாக உள்ளது. காடுகளின் பரப்பளவை உயர்த்துவதற்காக அரசு பல்வேறு முயற்சி எடுத்துள்ளது. அதற்காக தொடர்ந்து சுற்றுச்சூழல் மேம்படுத்த மதர் சமூக சேவை நிறுவனம் பாடுபட்டு வருகிறது.
இந்நிலையில் மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினரும் மதர் சமூக சேவை நிறுவனத்தின் நிறுவனரும், இயக்குனருமான கென்னடியின் மகள் ஷெகினா ஸ்டெனி ஆகியோர் திருமணம் காந்திநகரில் உள்ள தோமையார் ஆலயத்தில் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் மணமக்கள் மணகோலத்தில் மரக்கன்று நடும் பணிகளில் ஈடுபட்டனர்.
இதனைக் கண்டு திருமண விழாவிற்கு வந்த சிவகங்கை மாவட்ட நீதிபதி இராமலிங்கம், மாவட்ட வன அலுவலர் இளையராஜா, வன உதவி அலுவலர் முனியப்பன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் பேச்சியம்மாள், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் சொர்ணலதா, திருவள்ளுவர் பல்கலை கழக மேனாள் துணைவேந்தர் ஆறுமுகம், உடன்குடி பவர் பிளான்ட் உதவி பொறியாளர்கள் அப்துல் பக்கீம், வள்ளியம்மாள், தமிழ்நாடு பவர் லிமிடெட் முதன்மை செயல் அதிகாரி அரவிந்த் ராஜா, சமூக நலத்துறை மாவட்ட அலுவலர் பிரேமலதா, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன பொது மேலாளர் ராமகிஷோர், மேலாளர் சிவக்குமார், தூத்துக்குடி சிப்காட் அதிகாரிகள் லியோ, மேரி, அண்டோ, மாவட்ட கல்வி அலுவலர் முருகேசன், ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம், வின் பாஸ்ட் கார் தொழிற்சாலை அட்லியா திட்ட மேலாளர் பாலாஜி ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி செலின் ஜார்ஜ், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க பொதுச்செயலாளர் செல்வகுமார், செயலாளர் சுதாகர். உட்பட பொதுமக்கள் அனைவரும் மணமக்களை பாராட்டி வாழ்த்தினார்கள்