Thursday, 23 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

துறைமுக வளர்ச்சி பெயரில் தூத்துக்குடி மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க அனுமதிக்க முடியாது சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் அறிக்கை

Last updated: July 12, 2026 11:41 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது கடற்பகுதியில் தலைமுறை தலைமுறையாக நாட்டுப்படகு மற்றும் பைபர் படகுகள் மூலம் மீன்பிடித் தொழில் செய்து வாழ்ந்து வரும் மீனவர்கள், பெரிய சரக்குக் கப்பல்கள் மற்றும் வணிகக் கப்பல்களின் கட்டுப்பாடற்ற இயக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவது மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் கடற்பகுதிகளின் வழியாக பெரிய சரக்குக் கப்பல்கள் செல்வதாலும், சில கப்பல்கள் அப்பகுதிகளில் நங்கூரமிட்டு நிற்பதாலும், கடலில் விரிக்கப்பட்டுள்ள வலைகள், கயிறுகள், மிதவைகள் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி உபகரணங்கள் சேதமடைகின்றன.

இதுவெறும் பொருளாதார இழப்பு அல்ல. ஒரு மீன்பிடி வலை சேதமடைந்தால், ஒரு மீனவக் குடும்பத்தின் பல நாட்கள் அல்லது பல மாதங்களுக்கான வருமானம் முற்றிலும் முடங்கிவிடுகிறது. அவர்களின் குடும்ப உணவு, குழந்தைகளின் கல்வி, மருத்துவச் செலவு, படகுக் கடன் மற்றும் அன்றாட வாழ்வு அனைத்தும் பாதிக்கப்படுகின்றன. மேலும், மிகப்பெரிய சரக்குக் கப்பல்கள் சிறிய நாட்டுப்படகுகள் மற்றும் பைபர் படகுகளுக்கு அருகில் செல்வது, மீனவர்களின் உயிருக்கும் நேரடியான ஆபத்தை ஏற்படுத்துகிறது. கப்பல்களின் வேகம், அவை உருவாக்கும் அலைகள் மற்றும் இரவு நேரக் கடற்பயணம் ஆகியவை படகுகள் கவிழும் அபாயத்தையும், மோதல் விபத்துகளையும் அதிகரிக்கின்றன. கடல் என்பது சரக்குக் கப்பல்களின் வணிகப் பாதை மட்டுமல்ல அது மீனவர்களின் பணியிடம், வாழ்வாதாரம், உணவாதாரம் மற்றும் தலைமுறை உரிமையாகும்.

சட்ட உரிமைகள் கழகத்தின் முக்கியக் கோரிக்கைகள் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளை அரசு அதிகாரப்பூர்வமாக உடனடியாக அறிவிக்க வேண்டும். சரக்குக் கப்பல்களுக்கு மீன்பிடிப் பகுதிகளைத் தவிர்த்து தனியான கடல் வழித்தடம் அமைக்க வேண்டும். மீன்பிடிப் பகுதிகளில் கப்பல்கள் நங்கூரமிடத் தடை விதிக்க வேண்டும். சேதமடைந்த வலைகள், படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும். மீனவர்களுக்கென தனிப்பட்ட புகார் மற்றும் இழப்பீட்டுப் பிரிவு அமைக்க வேண்டும். துறைமுகத்திற்கு வரும் அனைத்து கப்பல்களின் இயக்கத்தையும் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கண்காணிக்க வேண்டும். கப்பல்கள் அருகில் வரும் தகவலை மீனவர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கும் எச்சரிக்கை அமைப்பை உருவாக்க வேண்டும். இரவு நேரங்களில் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மீனவர் சங்கங்கள், துறைமுக நிர்வாகம், மீன்வளத்துறை மற்றும் கடல்சார் காவல்துறை பங்கேற்கும் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்த வேண்டும். பாரம்பரிய மீனவர்களின் கடல் பயன்பாட்டு உரிமை மற்றும் பாதுகாப்பான தொழில் செய்யும் உரிமையைச் சட்டரீதியாகப் பாதுகாக்க வேண்டும். தூத்துக்குடி மீனவர்களின் இந்தப் பிரச்சனை ஒரு மாவட்டத்தின் பிரச்சனை மட்டும் அல்ல. இது ஒட்டுமொத்த தமிழக மீனவச் சமூகத்தின் வாழ்வாதார உரிமை தொடர்பான முக்கியமான மனித உரிமைப் பிரச்சனையாகும். மத்திய அரசும் தமிழக அரசும் இதை சாதாரண துறைமுக நிர்வாகப் பிரச்சனையாகக் கருதக்கூடாது. ஆயிரக்கணக்கான மீனவக் குடும்பங்களின் உயிர், உணவு மற்றும் எதிர்காலம் இதில் அடங்கியுள்ளது. “துறைமுக வளர்ச்சி வேண்டும்; ஆனால் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வளர்ச்சி வேண்டாம். சரக்குக் கப்பல்களுக்கு தனி வழித்தடம் வேண்டும் மீனவர்களுக்கு பாதுகாப்பான கடல் வேண்டும். என்று சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு வழங்க கூடாது..!* *தமிழக அரசு இந்த நடைமுறையை திரும்ப பெறவேண்டும்..!!* *தூத்துக்குடி சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் வலியுத்தல்
Next Article தூத்துக்குடியில் மதர் சமூக சேவை நிறுவன இல்ல திருமண விழாவில் மணக்கோலத்தில் மரக்கன்றுகள் நட்டிய மணமக்கள்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி பத்திாிகையாளர்களுக்கான உாிமையை வழங்க முதல்வா் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பற்றி பேசுவதற்கு ஸ்ரீநாத் எம்எல்ஏ காங்கிரஸ் பெருமாள்சாமிக்கு தகுதியே கிடையாது. தூத்துக்குடியில் வக்கீல் செல்வக்குமாா் பேட்டி

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

மக்கள் நல்வாழ்வு கட்சி – காமராஜர் லட்சிய பேரவை & பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் ஆதரவுடன் தூத்துக்குடி தொகுதியில் மு. பிரசன்ன குமார் வேட்பு மனு தாக்கல்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

கலைஞர் ஆட்சியில் 33 சதவீதம் ஸ்டாலின் ஆட்சியில் 50 சதவீதம் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது திமுக ஆட்சியில் தான் மகளிா் தின விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்து மேயா் ஜெகன் பெரியசாமி தகவல்!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?