தூத்துக்குடி தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பெருமாள்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தமான தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவு மண்டபத்தில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்து, பாண்டியன் கிராம வங்கியில் பல லட்சம் ஊழல் செய்தும், மோசடி செய்த மாநில பொதுக்குழு உறுப்பினர் திருப்பதி ராஜா, முன்னாள் மாவட்ட தலைவர் காமராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் சுப்பராயலு ஆகியோர் கட்சிக்கு பாத்தியப்பட்ட காந்தி நினைவு மண்டபத்தில் பல லட்சம் ஊழல் செய்தும் முறைகேடாக பத்திர பதிவு செய்துள்ளார்கள். இவர்கள் தற்காலிகமாக கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். இவர்கள் மீது ஊழல் சம்பந்தமாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் யாரும் மேற்கண்ட நபர்களிடம் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் இது சம்பந்தமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், சொத்து மீட்பு குழு தலைவரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாா்
ஊழல் மற்றும் முறைகேடு மூன்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தற்காலிகமாக நீக்கம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி அறிவிப்பு