தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் குழந்தைகள் மீது நடைபெறும் பாலியல் சீண்டல்கள், குழந்தை திருமணம், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கில் மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திபு ஆலோசனையின் கீழ், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு சார்பில் இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனm
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் நடைபெற்ற நிகழ்வில், தமிழன்டா கலைக்குழு தலைவர் ஜெகஜீவன் தலைமையில் தாரை தப்பட்டைகளுடன் கிராமிய நடனங்கள், விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் நாடகங்கள் மூலமாக பொதுமக்களிடம் தெளிவான தகவல்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வுகளில் தூத்துக்குடி மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுசியா, தலைமை காவலர்கள் பொன்னரசி, ராஜராஜேஸ்வரி, காவலர்கள் சண்முக பிரியா மற்றும் மணி செல்வியா பங்கேற்றனர்.
புதுக்கோட்டையில், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பாமா பத்மினி, உதவி ஆய்வாளர் லதா ஆகியோர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சமூக பாதுகாப்பு குறித்து மக்களுக்கு நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த முயற்சிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியினை தமிழ் கலாச்சாரம் அடங்கிய நிகழ்ச்சி தொகுப்புகள் மூலம் பொதுமக்கள் அனைவரும் அறிந்திடும் வகையில் எளிய வழியில் கருத்துக்களை தெரிவிக்கும் நோக்கோடு இது போன்ற நிகழ்ச்சிகளை அரசு துறைகள் வாரியாக மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை எழுந்து வருகிறது. தூத்துக்குடியை தலைமையாக கொண்டு செயல்படும் தமிழன்டா கலைக்குழு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை தொடர்ந்து மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல்வது அனைத்து தரப்பினர் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.