தூத்துக்குடி சட்ட உாிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது அரசியல் பேசும் மேடையில் மக்கள் குரல் மறைகிறது இன்று நாட்டு நடப்பை பாருங்கள் அரசியலில் யார் யாரை தாக்கினார்கள், யார் யாருக்கு பதில் சொன்னார்கள், யார் எந்த கட்சிக்கு போகிறார்கள் இதுதான் பெரிய செய்தியாக ஓடுகிறது. ஆனால் உண்மையான மக்கள் பிரச்சனைகள் எங்கே? ஒரு பக்கம் விவசாயி வண்டல் மண் கேட்டு போராடுகிறார். இன்னொரு பக்கம் தொழிலாளி 11 மாத சம்பளம் கேட்டு போராடுகிறார். ஒரு கிராம மக்கள் குடிநீர் கேட்டு அலுவலகத்தை முற்றுகையிடுகிறார்கள். 100 நாள் வேலை கேட்டு ஏழை மக்கள் கதவு தட்டுகிறார்கள். மீனவர்கள் வெளிநாட்டு சிறையில் உயிர் பயத்துடன் இருக்கிறார்கள். இவை தனித்தனி பிரச்சனைகள் அல்ல. இது சாதாரண செய்தியும் அல்ல. இது மக்களின் வாழ்வுரிமை கேள்வி. மக்கள் இலவசம் கேட்கவில்லை. தங்கள் உரிமையை கேட்கிறார்கள். விவசாயி மண் கேட்கிறார். தொழிலாளி சம்பளம் கேட்கிறார். ஏழை மக்கள் வேலை கேட்கிறார்கள். கிராம மக்கள் குடிநீர் கேட்கிறார்கள். மீனவர்கள் பாதுகாப்பு கேட்கிறார்கள். அரசு மக்களுக்காக இருக்க வேண்டுமா? அல்லது மக்கள் போராடினால் தான் அரசு கேட்க வேண்டுமா? மக்களின் அடிப்படை உரிமைகளை தாமதப்படுத்துவது அநீதி. உழைப்பாளியின் சம்பளம், விவசாயியின் வாழ்வாதாரம், கிராம மக்களின் குடிநீர், மீனவர்களின் உயிர் பாதுகாப்பு இவை அனைத்தும் அரசின் முதல் பொறுப்பு. மக்கள் தெருவில் இறங்கும் முன்பே அரசு தீர்வு கொடுக்க வேண்டும். அதுதான் நல்லாட்சி. அதுதான் சமூகநீதி. மக்கள் கேட்பது சலுகை அல்ல சட்டபூர்வமான உரிமையாகும் என்று சட்ட உாிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்
அரசியல் பேசும் மேடையில் மக்கள் குரல் மறைகிறது சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை