தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது அரசுப்பள்ளியை ஆய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு, தவெக அரசின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையிடம் அராஜக போக்குடன் கேள்விகேட்டு ஆசிரியர்களையும் அதட்டும் தோனியில் நடந்து கொண்ட விதம் கடும் கண்டனத்துக்குரியது. உங்கள் ரீல்ஸ் வெறியை தீர்த்துக் கொள்ள பள்ளி குழந்தைகளை பயன்படுத்துவதா? அது மட்டுமில்லாமல், லாஸ்ட் பென்ஞ் குழந்தைகள் நன்றாகப் படிக்க மாட்டார்கள் என்கிற பிற்போக்குத்தனமான சினிமா வசனங்களை பேசி பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டிருக்கிறார். சரி எப்படியோ போங்க உங்க பெருமையை பறைசாற்ற அந்த மாணவியை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் உங்கள் ரீல்ஸ் தேவையா? ரீல்ஸ் போட வேண்டியது அவ்வளவு முக்கியமானதா ? அமைச்சர் கீர்த்தனாவின் செயல் அருவருக்கதக்க செயலாகும். ஒரு குழந்தையிடம் என்ன பேச வேண்டும்? என்று தெரியாதவர்கள் தான் தவெக அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பது தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு. குழந்தைகளை அரசிடமிருந்தும் அமைச்சர்களிடமிருந்தும் பாதுகாக்க வேண்டிய மோசமான சூழலில் தமிழ்நாடு சிக்கியிருப்பது பெரும் மன வேதனையை தருகிறது. தவெக முதல்வா் விஜய் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து விதிமுறை மீறல்களும் பொறுப்பற்ற செயல்களும் அதிகம் நடைபெறுகிறது. என்று முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.
உங்கள் ரீல்ஸ் வெறியை தீர்க்க குழந்தைகளை இரையாக்குவீர்களா? அமைச்சா் கீா்த்தனாவுக்கு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கண்டனம்