தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோடு பிரதான சாலையில் உள்ள இந்திரா நகரில் சாலையின் இரு புறமும் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளது.
இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோரும், பள்ளி மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
இந்த நிலையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி.R.முருகன் தலைமையில் சக்தி பீட துணைத்தலைவர் திருஞானம், ஜெயராமன், கோபால், மாணிக்கம் உட்பட செவ்வாடை தொண்டர்கள் சார்பில் இன்று சாலையோரம் பொது மக்களுக்கு இடையூறாக இருந்த முள் செடிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.