தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி அலகு I & II, அணுகுச்சாலை, அல்லிக்குளம், தெற்கு வீரபாண்டியபுரம், வடக்கு சிலுக்கான்பட்டி, ஓட்டப்பிடாரம், சாமிநத்தம், சில்லாநத்தம் ஆகிய பகுதியில் அமைந்துள்ள சிப்காட் தொழில் பூங்காவினை மாவட்ட கலெக்டா் விஷுமகாஜன் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி I & II அலகில் 1458.10 பரப்பளவில் அமைந்துள்ள சிப்காட் தொழில் பூங்காவின் செயல் திட்டங்கள் குறித்தும், தொடர்ந்து தூத்துக்குடி அணுகு சாலை பகுதியில் 8.84 ஏக்கர் பரப்பளவில் அமையப்படவுள்ள பர்னிச்சர் பூங்காவின் திட்டப் பணிகள் குறித்தும், அல்லிகுளத்தில் உள்ள பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஏப்ரல் ஃபைபர்ரி சோர்சஸ், டிட்கோ விண்வெளிப் பூங்கா, 1060.25 ஏக்கர்பரப்பளவில் தெற்கு வீரபாண்டியபுரத்தில், வடக்கு சிலுக்கன்பட்டி 285.56 பரப்பளவில் தெற்கு வீரபாண்டியபுரம், ஓட்டப்பிடாரம், சாமிநத்தம், சில்லா நத்தம் ஆகிய பகுதிகளில் 1113.36 ஏக்கர் பரப்பளவில் புதியதாக அமையப்படவுள்ள சிப்காட் தொழிற்பூங்காவின் செயல்திட்டங்களை கலெக்டா விஷுமகாஜன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக, தூத்துக்குடி மாநகராட்சி கூட்டரங்கில் தேசியமக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆயத்தப் பணிகளின் முன்னேற்றம் குறித்து கலெக்டா் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் போது ஆணையர் ப்ரியங்கா, சிப்காட் திட்ட அலுவலர் ஜோன்மேரிசெல்வராணி, திட்டஅலுவலர் லியோவாஸ், நில எடுப்பு தனி வட்டாட்சியர்கள் சந்திரன், அமுதா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.