தூத்துக்குடி தமிழகத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் தமிழகத்தில் நடைபெற்ற 17வது சட்டமன்றத் தேர்தலை எதிர் நோக்கி நடிகர் விஜயின் பயணம் தமிழகம் முழுவதும் செயல்பட்டுக் கொண்டிருந்தது.
தோ்தல் முடிவில் இரண்டு திராவிட கட்சிகளையும் பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என்றும் குறிப்பாக திமுகவை தீயசக்தி என்று தொடர்ந்து நடிகர் விஜய் விமர்சித்து வந்தார். நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ளது.
முதலமைச்சராக பதவியேற்கும் விஜய் கட்சியில் ஆனால் தமிழக முழுவதும் திராவிட முன்னேற்ற கழகம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரு கட்சிகளில் பொறுப்பில் இருக்கும் பலருடைய வாரிசுகள் தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக முன்னாள் அதிமுக சபாநாயகா் தனபால் மகன் ராசிபுரத்தில் வெற்றி பெற்றுள்ளாா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக, திமுக கட்சியில் பொறுப்பில் உள்ளவா்கள் மற்றும் உள்ளாட்சி பதவிகளில் இருக்கும் முக்கிய பிரமுகர்கள் வாரிசுகள் தமிழக வெற்றி கழகத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பணியாற்றியுள்ளாா்கள்.
குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள மாநில மாவட்ட ஓன்றிய நகர பேரூா் கிளை வட்டம் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருக்கின்ற அதிமுக திமுக கட்சிகளில் உள்ள வாாிசுகள் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்கு சேகாித்து பணியாற்றினாா்கள்.
இது ஏனென்றால் வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் தங்களுடைய வாரிசுகளை தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நிறுத்தி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகின்றனர் இதுதான் தமிழகத்தில் அதிமுக திமுக தோல்விக்கு முதல் காரணம்.
இதில் வேடிக்ைக என்னவென்றால் தற்போது உள்ளாட்சி பதவிகளில் இருக்கும் அதிமுக திமுகவினரே தங்களுடைய வாரிசுகளை தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து செயல்பட வைத்து வருகின்றனர். வரும் காலங்களில் அதிமுக மற்றும் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது வரும் காலம் தமிழக வெற்றி கழகம் தான் என்று அதிமுக மற்றும் திமுகவில் இருக்கும் பலரும் முடிவு செய்து தங்களுடைய வாரிசுகளை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்து தொடர்ந்து செயல்பட அனுமதித்துள்ளனா்.
தமிழகத்தில் திமுக தொடங்கி 76 ஆண்டுகாலம் ஆகிய நிலையில் பல ஆண்டுகளாக கலைஞர் ஸ்டாலின் முதலமைச்சராக இருந்த போது பதவி சுகத்தையும் நன்மைகளையும் அடைந்து விட்டு அதே வழியில் அதிமுக தொடங்கி 55 ஆண்டுகள் ஆகிய நிலையில் எம்ஜிஆர்் ஜெயலலிதா எடப்பாடி பழனிச்சாமி ஆகியோா் ஆட்சியில் பதவி மற்றும் நன்மைகளை அனுபவித்துவிட்டு இரண்டு திராவிட கட்சிகளில் உள்ள நிா்வாகிகள் உள்பட பலருடைய குடும்ப உறுப்பினா்களில் வாக்கு வங்கிகள் தமிழக வெற்றிக்கழகம் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளது. என்பது தமிழகம் முழுவதும் தௌிவாக தொிகிறது.
ஆகையால் இரண்டு திராவிட கட்சிகளின் தலைமையும் உடனடியாக சுதாாித்து கொண்டு அதிரடியாக பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இல்லை என்றால் வரும் உள்ளாட்சித் தேர்தலில் மற்றும் நாடாளுமன்ற ேதா்தலில் மீண்டும் தமிழக வெற்றி கழகம் வெற்றி வாகை சூடும் நிலை வரும் என்பதில் எந்தவிதமான ஐயப்பாடும் கிடையாது. தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றவுடன் திமுக மற்றும் அதிமுகவில் நிர்வாகிகளாக இருக்கும் வாரிசுகள் தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி திருவிழாவை போல் கொண்டாடியுள்ளனா்.
இந்த விஷயத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் திமுக தலைவர் ஸ்டாலினும் தமிழகம் முழுவதும் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தடம் மாறாமல் கொள்கையுடன் வாழும் அதிமுக திமுக இருகட்சிகளை சேர்ந்தவா்கள் எதிா்பாா்க்கின்றனா். பொறுத்திருந்து பாா்ப்போம்108
தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக திமுக வாாிசுகள் விஜய் கட்சியில் ஸ்டாலின் பழனிச்சாமி சாட்டையை சூழட்டுவாா்களா?