தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் செல்வம் கிறிஸ்டோபர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்த போது, திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். சபாநாயகர் பின்னர் பேச வாய்ப்பு தரப்படும் என்று உறுதி அளித்தார். ஆனாலும் அதை ஏற்காமல் வெளியேறி விட்டனர். திமுகவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை உண்டு. முதல்வர் விஜய் குற்றச்சாட்டு வைத்தால், அதற்கு உடனடியாக பதில் சொல்ல வேண்டும் என்று கேட்பதும் எதிர்க்கட்சியின் கடமைதான். ஆனால் சபாநாயகர் “பதில் சொல்ல வாய்ப்பு தரப்படும்” என்று சொன்ன பிறகும் வெளியேறிவிட்டால், மக்களின் பிரச்சனையை சட்டமன்றத்துக்குள் வைத்து நேரடியாகச் சண்டையிட்டு பேசும் வாய்ப்பை திமுக விட்டுக்கொடுத்தது போல தெரிகிறது.
அதே நேரத்தில், ஆளுங்கட்சியும் கேலி, தூண்டல், சினிமா வசனம் மாதிரி அல்லாமல் ஆதாரத்தோடு பேச வேண்டும். சட்டமன்றம் யாருடைய சொத்து இல்லை. அது மக்களின் உரிமை மன்றம். ஆளுங்கட்சி ஆணவப்படக்கூடாது. முதல்வர்விஜய் குற்றச்சாட்டு வைத்தால், எதிர்க்கட்சி வெளியே போக வேண்டுமா? எதிர்க்கட்சி ஓடிக்கொள்ளக்கூடாது. இருவரும் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.” ‘ஆதாரம் என்ன?’ ‘எந்த திட்டத்தில் தவறு நடந்தது?’ ‘மக்கள் பணம் எங்கே போனது?’ என்று நேரடியாக கேட்டு, அரசை பதில் சொல்ல வைத்திருக்க வேண்டும். வெளியே நடந்து போவது செய்தியாக இருக்கலாம். ஆனால் அவையிலேயே நின்று உண்மையை கேட்பது தான் மக்களுக்கு செய்யும் கடமை.
எதிர்க்கட்சி என்பது வெளிநடப்பு செய்ய மட்டும் இல்லை. ஆளுங்கட்சியின் ஒவ்வொரு வார்த்தையையும் ஆதாரத்துடன் சோதிக்க வேண்டும். மக்கள் அவர்களை சட்டமன்றத்துக்கு அனுப்பியது கோஷம் போடுவதற்காக இல்லை. மக்கள் சார்பாக கணக்கு கேட்கத்தான். சட்டமன்றம் கட்சிகளின் சொத்து அல்ல. அது மக்களின் உரிமை மன்றம். அங்கே இருந்து போராடுபவன் தான் உண்மையான எதிர்க்கட்சி. வெளியே போவது எளிது. உள்ளே நின்று பதில் வாங்குவது தான் அரசியல். வெளிநடப்பு செய்தால் செய்தி வரும். ஆனால் அவையில் நின்று கேள்வி கேட்டால் மக்களுக்கு பதில் வரும். சட்டமன்றம் கோஷத்திற்கான இடம் அல்ல கணக்கு கேட்கும் இடம். திமுக செய்த மிகப்பெரிய அரசியல் தவறு என்ன தெரியுமா? சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தது தான். அவையிலேயே நின்று, ‘முதல்வரே, ஆதாரம் என்ன?’ ‘எந்த கோப்பில் தவறு?’ ‘எந்த திட்டத்தில் ஊழல்?’ ‘மக்கள் பணம் எங்கே போனது?’ என்று நேரடியாக கேட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், அது தான் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் சட்டமன்றத்தில் கேட்கப்படும் கேள்வி வரலாற்றில் பதிவாகும். ஆனால் வெளிநடப்பு செய்ததால் என்ன ஆனது? முதல்வர் பேச்சு மட்டும் மக்களிடம் சென்றது. திமுக பதில் மக்களிடம் செல்லவில்லை. அதுதான் அரசியல் இழப்பு.
திமுக வெளியேறாமல் பதில் கொடுத்திருந்தால் அது அரசியல் பலம். ஆனால் வெளிநடப்பு செய்ததால் தன்னுடைய மரியாதையையும், தன்னுடைய பதில் சொல்லும் வாய்ப்பையும் தானே குறைத்துக்கொண்டது. சட்டமன்றம் கோபத்தை காட்டும் இடம் இல்லை. அது உண்மையை நிரூபிக்கும் இடம். வெளியே போவது செய்தி ஆகலாம். ஆனால் உள்ளே நின்று பதில் கேட்பதே உண்மையான அரசியல்.” என்று வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.