தூத்துக்குடி மாவட்ட கலெக்டா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் கனிமொழி எம்பி தலைமையில் கலெக்டா் விஷுமகாஜன் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்டத்தில் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் செயல்படுத்தப்படும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம் குறித்தும், விக்சித் பாரத்ரோஸ்கர் மற்றும் அஜீவிகா மிஷனுக்கான உத்தரவாத திட்டப்பணிகள் குறித்தும், பிரதம மந்திரி கிராமச்சாலைகள் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புதிட்டம், தூய்மை பாரத இயக்கம் ஊரகம், ஜல்ஜீவன் மிஷன், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி வளர்ச்சித்திட்டம், பிரதம மந்திரி முன்னோடி கிராம திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் சுயஉதவிக் குழுக்கள் அமைத்தல், ஊரக மற்றும் நகர்ப்புறம், சமுதாய முதலீட்டுநிதி, வங்கிக்கடன் இணைப்பு, தீன்தயால் உபாத்யாய கிராமின் கௌசல்யாயோஜனா பணிகள்குறித்தும், சமூகபாதுகாப்பு திட்டத்தின் கீழ்தேசிய சமூக உதவித்திட்டம், தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சீர்மிகு நகரத்திட்டம், அம்ரூத்திட்டம், தூய்மை இந்தியா திட்டம் 2.0, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் சார்பில் தூய்மை இந்தியா இயக்கம் நகர்ப்புறம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்தும், பேரூராட்சி சார்பில் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா குறித்தும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீட்டுவசதிதிட்டம் – அலகு 4, அரசு மானியத்துடன் பயனாளிகள் தாமாக வீடுகள் கட்டும் திட்டம் குறித்தும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தேசிய ஊரக குடிநீர்திட்டம் குறித்தும், பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் குறித்தும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் நுண்ணீர் பாசனத்திட்டம், பிரதம மந்திரி பயிர்காப்பீடுதிட்டம், தேசியவேளாண் வளர்ச்சித்திட்டம், பாரம்பரிய வேளாண் வளர்ச்சித்திட்டம் ஆகிய திட்டப்பணிகள் குறித்தும், வேளாண்மைத்துறை சார்பில் பிரதமமந்திரி பயிர்காப்பீடுதிட்டம், பயறுஇயக்கம், தேசிய உணவுபாதுகாப்புமற்றும் ஊட்டச்சத்துஇயக்கம், பிரதம மந்திரிராஷ்ட்ரியகிரிஷிவிகாஸ்யோஜனா, தேசியவேளாண் வளர்ச்சித்திட்டம் பாரம்பரிய வேளாண்வளர்ச்சித்திட்டம், பிரதமமந்திரி நுண்ணீர்பாசனத்திட்டம், பிரதமமந்திரி விவசாய நீர்ப்பாசனத் திட்டம், வேளாண்மை பொறியியல்துறை சார்பில் திறந்த வெளிபாசனக் கிணறு புணரமைத்தல் திட்டம், சூரியசக்தி மின்வேலிமானியத்தில் அமைக்கும்திட்டம், வேளாண் இயந்திரமயமாக்குதலுக்கான துணைஇயக்கம்திட்டம், மின்னணு தேசிய வேளாண்சந்தை ஆகிய திட்டப்பணிகள் குறித்தும்,
நிலஅளவை ஆவணங்களை கணினி மயமாக்குதல்திட்டம், தமிழ்நாடு மின்விநியோக கழகம் சார்பில் மறுசீரமைக்கப்பட்ட விநியோகத்திட்டம், பிரதமமந்திரி – சூரியமேற்கூரை மின்னொளி திட்டப்பணிகள் குறித்தும், சுகாதாரத்துறை சார்பில் ஒருங்கிணைந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித்திட்டம் மற்றும் பிரதம மந்திரி மாத்ருவந்தனாயோஜனா திட்டம், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துதுறை சார்பில் 15வது நிதிக்குழுதிட்டத்தின் கீழ் (2021 -2026) கட்டப்பட்டுள்ள மற்றும் கட்டப்பட்டு வரும் கட்டட பணிகள் குறித்தும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்விதிட்டம் குறித்தும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் கீழ்போஷான் அபியான் திட்டம் குறித்தும், சமூகநலன் மற்றும்மகளிர் உரிமைத்துறை சார்பில் புரட்சிதலைவர் எம்ஜிஆர் சத்துணவுதிட்டம், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் பிரதமமந்திரி உஜ்வாலாதிட்டம், பிரதமமந்திரி இலவச எரிவாயு இணைப்புத் திட்டம், தேசிய உணவுப்பாதுகாப்பு சட்டம் 2013 ன்கீழ் வழங்கப்பட்டுள்ள மின்னணு குடும்ப அட்டைதாரர்கள் குறித்தும், இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு கோரிக்கை எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், மாவட்ட சமூகநல அலுவலகம் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் குறித்தும், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் சுகம்யாபாரத் அபியான் போன்ற பல்வேறு திட்டப்பணிகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென அலுவலர்களுக்கு கனிமொழி எம்.பி அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், எம்்.எல்.ஏக்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன், கருணாநிதி, மேயர் ஜெகன் பொியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் குருச்சந்திரன், ஆணையா் ப்ரியங்கா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சரவணன், மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு உயர் அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.