தூத்துக்குடி மாவட்டத்தின் 6வது புத்தகத்திருவிழா நிகழ்ச்சியில் “தொடர்ந்து படி தூத்துக்குடி” என்ற தலைப்பின் கீழ் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சா்மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் எதிர்கால சந்ததியினர்களான இளைய சமுதாயத்தினர்களிடையே புத்தகம் வாசிப்பினை ஊக்குவிக்கும் வகையிலும், வரலாறு, பண்பாடு, மொழி, கலாச்சாரம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் இப்புத்தகம் திருவிழா அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் நடத்துவதற்கு அறிவுறுத்தினார்.
இந்நிலையில் 6வது நாள் நிகழ்ச்சியில் சமூகநீதி பயணம் குறித்து நடைபெற்ற கருத்தரங்கிற்கு தமிழன் பிரச்சன்னா நடுவராக ெபாறுப்பு வகித்தாா்.
சமூகநீதியின் தோற்றமும் உள்ளடக்கமும் என்ற தலைப்பில் மதூர் சத்யாவும், நெடிலும் குறிலும் பேசப்படவேண்டிய சமூகநீதி என்ற தலைப்பில் மதிவதனியும், சுகுனா திவாகா் மொழியிலும் சமூகநீதி கலையிலும் சமூகநீதி என்ற தலைப்பில் குறித்து பேசினாா்கள்.
பின்னா் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் ஓவ்வொரு ஆண்டும் நடைபெறுகின்ற புத்தக கண்காட்சி நமது மாவட்டத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. ஓவ்வொருவடைய வாழ்வில் வளா்ச்சிக்கும் முதலில் பள்ளி படிப்பும் கல்லூாி படிப்பும் அதன்மூலம் நாம் பெறுகின்ற பொது அறிவும் நல்ல பழக்க வழக்க ஓழுக்கங்களும் முன்னெடுத்துச்செல்லும் புத்தகத்தை எடுத்துக்கொண்டால் முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை முழுமையாக படித்துக்கொண்டு அதை மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும் அப்போது தான் எந்த போட்டி தோ்வாக இருந்தாலும் நாம் வெற்றி பெற முடியும். போட்டி நிறைந்த உலகத்தில் எல்லா திறமைகளையும் வளர்த்து கொண்டால் சாதனைகள் புாியலாம் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியுடன் எல்லா புத்தகங்களையும் படித்து களமாட வேண்டும். தொடா்ந்து நடைபெறுகின்ற புத்தக கண்காட்சியை பொதுமக்கள் கண்டு களித்து பயனடைய வேண்டும் என்று பேசினாா். விழாவில் கலெக்டா் இளம்பகவத், பயிற்சி கலெக்டா் புவனேஷ்ராம், கோட்டாட்சியா் பிரபு, துணை மேயர் ெஜனிட்டா, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுசுவாமி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளர் அந்தோணி கண்ணன், கவுன்சிலா் நாகேஸ்வாி, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமாா், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், இளைஞர் அணி அமைப்பாளர் அருன்சுந்தா், அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபா் விஜயராஜ், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் செல்வக்குமாா், மீனவரணி துணை அமைப்பாளர் ஜேசையா, மாவட்ட பிரதிநிதி சோ்மபாண்டியன், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அண்ணாத்துரை, வட்டச்செயலாளர்கள் டென்சிங், கருப்பசாமி, மகளிர் அணி துணை அமைப்பாளர் இந்திரா, வட்டப்பிரதிநிதி பாஸ்கா், பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் கமலி, மணி அல்பட் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
புத்தகங்களை படித்து கல்வி அறிவை வளா்த்து கொண்டு களமாட வேண்டும். தூத்துக்குடி புத்தக திருவிழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.
