தூத்துக்குடி அண்ணா நகர் பகுதி டூவிபுரம் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமினை சமூக நலன் அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் தொடங்கி வைத்து முகாமில் பதிவு செய்தவர்களுக்கு தொழிலாளர் நலவாரிய அடையாள அட்டையை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.