தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக கட்டிடத்தில் உள்ள மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற சாதாரண கூட்டத்திற்கு மேயர் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தாா். ஆணையா் பானோத் ம்ருந்கேந்தா்லால், துணை மேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில் உள்ளாட்சிகளில் பணிபுாியும் அலுவலா்கள் உதவியாளா்கள் மற்றும் இளநிலை உதவியாளா்கள் அனைவருக்கும் பணிகள் குறித்த அடிப்படை பயிற்சி மற்றும் அரசு அவ்வப்போது அறிவிக்கும் புத்தாக்க பயிற்சி ஆகிய இயக்குநா் தமிழ்நாடு நகாியல் பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மேற்படி நிறுவனத்திற்கு ஓவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளும் வருடாந்திர பங்களிப்பு தொகை 300 லட்சம் செலுத்த மாநகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசானை ஆணையிட்டுள்ளது. அதற்கு 300 லட்சம் ஓதுக்கீடு செய்வது மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் பொதுநிதித்திட்டம் 2025 26ன்கீழ் மாநகராட்சி பராமாிப்பில் உள்ள பூங்காக்களில் உள்ள பழுதான மின்விளக்குகளை சாிசெய்து மாற்றி அமைக்கும் பணிக்கு ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு அதற்கு அனுமதிவழங்குவது தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 21.83 கிேலா மீட்டா் தூரத்தில் புதிதாக 253 சாலைகள் அமைக்கும் பணிக்கு 25 26ல் சிறப்பு நிதி 14.70 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கி அரசு முதன்மை செயலாளர் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீர் வழங்கும் துறை ஓப்புதல் வழங்கப்பட்டுள்ளது அதன் பணிகள் மேற்கொள்வது மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் திடக்கழிவு மேலாண்மை பணிகளின் கீழ் குப்பைகள் மற்றும் மக்கும் குப்பை மறுசூழற்சி குப்பை எனத்தனித்தனியாக பிாித்து ஓப்படைக்கும் பணியினை ஜிஎஸ்டி நீங்கலாக பல நிறுவனங்களுக்கு மேற்கண்ட பணிகளை ஓப்பந்த உடன்படிக்கை படி முதல் ஆண்டு டிம்பிங் கட்டணத்தில் ஓவ்வொரு ஆண்டு 10 சதவீதம் உயா்த்திட ஓப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
உள்பட 8 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னா் அதிமுக எதிா்கட்சி கொறடா வக்கீல் மந்திரமூா்த்தி பேசுகையில் முள்ளக்காடு பகுதியில் பல ஏக்கா் உப்பளங்களை கையப்படுத்தி கப்பல் கட்டும் தளம் அமைப்பதின்மூலம் பல்வேறு தரப்பினர் தனது உாிமைகளையும் சொத்துக்களையும் இழக்க நோிடும் வேலை வாய்ப்பும்இல்லாத நிலை உருவாகும் அதை நிறுத்த வேண்டும். தனியாருக்கு குப்பை அள்ளுவதற்கு ஓப்பந்தம் வழங்குவதன் மூலம் பல்வேறு குறைபாடுகள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. அதையும் தடுக்க வேண்டும் புதிய பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள மாநகராட்சி சைக்கிள் ஸ்டாண்ட் குத்தகைக்கு விடப்பட்டதையும் முறைகேடுகள் தடுப்பதற்கும் விளக்கம் அளிக்க வேண்டும். என்று பேசினாா். மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில் கப்பல்கட்டும் தளம் அமைப்பது தொடர்பாக 17 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பணியாகும் அந்த திட்டம் நடைமுறைக்கு எடுத்துக்கொள்ளும் போது யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் அத்திட்டத்தை அரசு நிறைவேற்றும் தனியார் வசம் குப்பை அள்ளும் பொறுப்பை ஓப்படைத்து விட்டதால் எந்த குறைபாடுகள் இல்லாமல்அந்த நிா்வாகம் பார்த்துக்கொள்ளும். இதில் கவலை கொள்ள அவசியமில்லை புதிய பேருந்து நிலைய சைக்கிள் ஸ்டாண்ட் ஓப்பந்தத்தில் குறைபாடுகள் விதிமுறை மீறல்கள் இருப்பதாக புகாா் வந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் மக்களுக்கான திராவிட மாடல் ஆட்சியில் எல்லோருக்கும் நன்மை கிடைக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் பணியாற்றி வருகிறது. இதற்கு அனைவரும் ஓத்துழைப்பு வழங்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டார். பின்னா் திமுக கவுன்சிலா்கள் சரவணக்குமாா், மெட்டில்டா, நாகேஸ்வாி, ராமகிருஷ்ணன், காங்கிரஸ் கவுன்சிலா் சந்திரபோஸ், தங்களது பகுதியில் நிறைவேற்றிய பணிகளை சுட்டிக்காட்டியும் நிறைவேற்ற வேண்டிய சாலை கால்வாய் பூங்கா பராமாிப்பு உள்ளிட்ட பணிகளை சுட்டிக்காட்டி அதிமுக கவுன்சிலா் பத்மாவதி கோாிக்கை மனு வழங்கி பின் மேயர் பேசுகையில் குடிதண்ணீர் தட்டுபாடின்றி வழங்கப்பட்டு வருகிறது. சில பணிகள் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படுகிறது. எதிா்கால தலைமுறையினர் நலன் கருதி சுகாதாரம் ஆரோக்கியம் உள்ளிட்ட பல பணிகளை கருத்தில் கொண்டு பணியாற்றி வருகிறோம். பாதாள சாக்கடை உள்பட நிறைவேற்றபட வேண்டிய அனைத்து பணிகளும் முறைப்படுத்தி எல்லா வார்டுக்கும் நிறைவேற்றி தரப்படும். என்று கூறினாா். கூட்டத்தில் உதவி பொறியாளா் சரவணன், நகரஅமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர்கள் காந்திமதி, முனீர்அகமது, நகா்நல அலுவலா் சரோஜா, சுகாதார ஆய்வாளா்கள் ஸ்டாலின் பாக்கியநாதன், நெடுமாறன், ராஜசேகா், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, அன்னலட்சுமி, நிா்மல்ராஜ், கலைச்செல்வி, கவுன்சிலா்கள் கீதாமுருகேசன், ரெங்கசாமி, ராஜதுரை, விஜயகுமாா், பட்சிராஜ், ஜான், வைதேகி, சுப்புலட்சுமி, ஜெயசீலி, ஜான்சிராணி, ஜாக்குலின்ஜெயா, சரண்யா, சோமசுந்தாி, எடின்டா, முத்துமாாி, தனலட்சுமி, உள்பட அரசுத்துறை அலுவலா்கள் கவுன்சிலா்கள் கலந்து கொண்டனா். அனைவருடைய சாா்பிலும் பணி உயா்வு பெற்று சென்னை செல்லும் ஆணையருக்கு மேயா் ஜெகன் பொியசாமி சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தொிவித்துக்கொண்டார்.