தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் போல்பேட்டை போத்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் வருஷாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கி சிறப்பு அலங்காரத்துடன் மஹா அபிஷேகம் நடைபெற்று பின்னர் நடைபெற்ற தீபாராதனையில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, தா்மகா்த்தா ராஜா பொியசாமி, தொழிலதிபர் அசோக் பெரியசாமி ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் 43 ஆண்டுகளுக்கும் மேல் கோவிலை வழிநடத்திய முன்னாள் தர்மகர்த்தாவும் எம்எல்ஏ-வும், திமுக மாவட்டச் செயலாளருமான பெரியசாமி திடலில் நடைபெற்ற அனைத்து தரப்பினரும் கலந்து கொண்ட சமபந்தி அன்னதானத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
விழாவில் கோவில் செயலாளர்கள் செல்வராஜ், செல்வக்குமார், பொருளாளர் வேல்ச்சாமி, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முத்துச்செல்வம், ரத்தினசாமி, பேச்சிமுத்து, கமிட்டி உறுப்பினா்கள் ஜீவானந்தம், ராஜாமணி, அசோக், ரவீந்திரன், கீதா முருகேசன், நாராயணன், பாஸ்கா், பாலமுருகன், சரவணன், தங்கச்சந்திரன், முருகேசன், ஆழ்வார்ராஜ், மந்திரமூர்த்தி, ராம்குமார், ராஜேந்திரன், அர்ஜூனன், பெரியசாமி, செல்வக்குமார், சித்திரைச்செல்வன், இளஞ்சூரியன், பெரியசாமி, சேகர்மணி, கணேஷ், சண்முகசுந்தரம், முத்துராஜா, இளையராஜா, ராஜ்குமார், மாணிக்கம், இளைஞரணியினர் சக்திகணேஷ், சுரேஷ், மகேந்திரன், கண்ணன், கதிரவன், சுப்புராஜ், இசக்கிமுத்து, பால்ராஜ், பிரபாகரன், கற்குவேல் ராஜ், மண்டலத்தலைவர் அன்னலட்சுமி, ெபாதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், சுற்றுசூழல் அணி துணை அமைப்பாளர் வேல்பாண்டி, கவுன்சிலா் ஜாக்குலின் ஜெயா, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பர், லிங்கராஜா, பெருமாள்கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் செந்தில்குமார், முன்னாள் விவசாய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், முன்னாள் கவுன்சிலா் பொியசாமி, மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.