தமிழ்நாட்டில் 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு தலைமை செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக எஸ்.பிரியங்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்ட பானோத் ம்ருகேந்தர் லால் திடீரென மாற்றப்பட்டு கூட்டுறவு, உணவு மற்றும் பாதுகாப்பு துறை அரசு துணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய ஆணையராக எஸ் பிரியங்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய ஆணையர் விரைவில் பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக பிரியங்கா நியமனம்!!!
