தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலுக்குட்பட்ட பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் சிவனனைந்த பெருமாள் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு கடந்த 8ம் தேதி வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் கால்நட்டு விழா நடைபெற்றது. 4ம் நாள் நிகழ்ச்சியாக பரதநாட்டியம் நடன நிகழ்ச்சியை தொடங்கி வைத்து கண்டு களித்து பின்னர் மாணவிகளுக்கு பாிசுகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வழங்கினார். முன்னதாக சாமி தாிசனம் செய்தார். செவ்வாய்கிழமை மற்றும் வியாழக்கிழமை திருவிளக்கு பூஜையுடன் சுவாமிகளுக்கு கும்பம் ஏற்றும் பூஜையும் நடைபெறுகிறது. ெதாடர்ந்து 8 நாட்கள் சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. 8ம் நாளான வௌ்ளிக்கிழமை மதிய கொடை நடைபெற்று சிறப்பு பூஜை நடைபெற்று சமபந்தி அன்னதானம் நடைபெறுகிறது. இரவு மாவிளக்கு ஊர்வலம் மற்றும் சாமகொடை நடைபெறுகிறது. கோவில் கொடைவிழாவில் தலைவர் லிங்கசெல்வன், செயலாளர் வேல்மணிமுருகன், கொைடவிழா பொருளாளர் வௌ்ளத்துரை, துணைத்தலைவர் பொன்ராஜ், துணைச்செயலாளர் ஜெயக்குமார், தணிக்கையாளர்கள் ஜெயபாண்டி, சிவக்குமார், நிர்வாக குழு உறுப்பினர்கள் தங்கமாாியப்பன், சண்முகசுந்தரம், முத்துமாாியப்பன், சூர்யகாந்த், சதீஷ்குமார், சுரேஷ், குமரன், சிவலிங்கம், மற்றும் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், தொழிலதிபா் அன்பழகன், கவுன்சிலா் பேபி ஏஞ்சலின், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி, உள்பட கோவில் வாரவழிபாடு மாதர் சங்கத்தினர் கோவில் கைங்கர்ய பக்தர்கள் சண்முகபுரம் இளைஞர் முன்னேற்ற அணியினர் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி சண்முகபுரம் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலில் கொடைவிழாவையொட்டி பரதநாட்டிய மாணவிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் பாிசு வழங்கினார்.
