சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் கடந்துவிட்டது ஆனால் தமிழர்கள் இன்னும் ஆங்கிலேயர்களின் அடிமைகளாக தான் இருக்கிறார்கள் இன்று வரை இங்கிலாந்து நாட்டினுடைய பேண்ட் செட்டுகளை தான் தங்களது திருமண வீடுகளில் பயன்படுத்துகிறார்கள் இது ஒரு புறம் இதனாலும் தமிழர் கலைகள் அழிந்தது அதற்குப் பிறகு சினிமாவினாலும் தமிழர் கலைகள் அழிந்தது இந்த 70 ஆண்டுகள் கழித்த பிறகு கேரள மாநில சண்டை மேளம் வட இந்திய மக்களின் நாசிக் டோல் போன்றவை தமிழகத்தில் அரசியல்வாதிகளால் அறிமுகப்படுத்தப்பட்டது அதற்குப் பிறகு தமிழக நாட்டுப்புற கலைஞர்களே அவற்றை கையில் எடுத்து தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்தனர் இதனாலும் இன்றைக்கு தமிழ்நாட்டில் நாட்டுப்புற கலைகளின் வீழ்ச்சி நடந்து வருகிறது இதற்கு அரசியல்வாதிகள் துதி பாடுகிறார்கள் மேலும் தமிழக பொதுமக்கள் பலரும் செண்டை மேளம் நாசிக் டோல் போன்றவை தமிழ்நாட்டில் உள்ளது தான் என்று அவர்களும் நினைக்க ஆரம்பித்து விட்டனர் இந்த நிலையில் தமிழர் கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என்கின்ற சிந்தனையில் தமிழன்டா இயக்கமானது கடந்த எட்டு ஆண்டுகளாக தமிழர் கலைகள் உணவுகள் மருத்துவம் போன்றவற்றிற்கான விழிப்புணர்வுகளை ஜெகஜீவன் தலைமையில் மேற்கொண்டு வருகிறது இந்த சூழ்நிலையில் இந்து அறநிலை துறை சார்ந்த கோவில்களில் பிற மாநில கலைகள் பயன்படுத்தக்கூடாது தமிழர் கலைகள் தான் பயன்படுத்த வேண்டும் என்கின்ற அரசாணையை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஏற்கனவே வெளியிட்டு இருந்தார் ஆனால் இந்த அரசாணையை தமிழ்நாட்டில் உள்ள இந்து அறநிலை துறை சார்ந்த கோவில் நிர்வாகிகள் பலர் இந்த அரசாணையை பயன்படுத்துவது கிடையாது முறை படுத்துவதும் கிடையாது ஆனால் தமிழர் கலைகளை அவர்கள் அறியாமலேயே அழிக்கிறார்கள் திருச்செந்தூரில் ஜூலை 7ஆம் தேதி குடமுழுக்கு நடக்க இருக்கிறது இதனால் மண்டகப்படி ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகிறது ஜூலை ஒன்றாம் தேதி நடைபெற்ற விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட சண்டை மேளங்களை பயன்படுத்தி இருக்கிறார்கள் திருச்செந்தூர் சுற்றி நாட்டுப்புற கலைஞர்கள் 500க்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள் அவர்களது வாழ்வாதாரத்தை மனதில் நினைத்துக் கொண்டு தமிழர் கலைகளை வளர்க்கும் விதமாக பல்வேறு பகுதியில் உள்ள கலைஞர்களை அழைத்து மேம்படுத்தி இருக்கலாம் ஆனால் மேம்படுத்தப்படவில்லை இவை கண்டிக்கத்தக்கது தமிழர் கலைகளை அழிக்கும் எண்ணத்தில் இருப்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் குடமுழுக்கு தமிழ் கடவுள் முருகருக்கு தமிழிலே வேத மந்திரங்கள் முழங்க குடமுழுக்கு நடைபெற வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது தமிழ் கடவுள் முருகருக்கு தமிழிலே வேத மந்திரங்கள் விளங்க வேண்டும் அதேபோல தமிழ் கடவுள் முருகருக்கு தமிழர் கலைகள் தான் இசைக்கப்பட வேண்டும் என்பதே தமிழன்டா இயக்கத்தின் தலைவர் தமிழன்டா கலைக்குழு நிறுவனத் தலைவர் ஜெகஜீவன் கோரிக்கையாகும் இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முடிவைத்தானேந்தல் கிராமத்தில் தமிழன்டா இயக்க நிர்வாகிகள் நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவில் பிற மாநில கலைகளை பயன்படுத்தக் கூடாது என்கின்ற கோரிக்கையை தமிழக அரசுக்கும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு முன் வைத்தனர். இதனை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் செவிமடக்குமா செவிமடுக்கவில்லை என்று சொன்னால் திங்கள் கிழமை ஏழாம் தேதி அரசு கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழர் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் உள்ள கலைஞர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிக்கையில் தமிழன்டா இயக்க தலைவர் ஜெகஜீவன் கோரிக்கையாக விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கை பல்வேறு தரப்பினர் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
திருச்செந்தூரில் தமிழ் கடவுளுக்கு குடமுழுக்கு நடைபெறும் போது தமிழிலே வேத மந்திரங்கள் முழங்க வேண்டும்,தமிழர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும். தமிழக அரசு இதனை தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென தமிழன்டா கலைக்குழு தலைவர் ஜெகஜீவன் அரசுக்கு வேண்டுகோள்
