ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனையடுத்து தூத்துக்குடியில் கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில், “ஓரணியில் தமிழ்நாடு இணைந்த திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மக்களை சந்திப்போம். அவர்கள் நம்முடன் சேருகிறார்களோ, இல்லையோ ஒன்றிய அரசு என்னென்ன செய்திருக்கிறது. தமிழக அரசு என்ன நலத்திட்டங்களை செய்திருக்கிறது. என்பதை சொல்ல வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
வரக்கூடிய காலங்களில் மீண்டும் முதலமைச்சராக ஸ்டாலின் வருவார்கள். என்ற உறுதியோடு இயக்கத்தின் சகோதரர்கள் அத்தனை பேரும் பணியாற்றி வருகிறார். தமிழக மக்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்து வருகிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு திட்டம் செயல்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் “ஒன்றிய அரசு கல்விக்கு நிதி ஒதுக்கவில்லை. 100 நாள் திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை. நீட் தேர்வு புதிய கல்விக் கொள்கை என கிராமப்புற குழந்தைகளின் உயர்கல்வி மறுக்கப்படுகிறது.
இப்படி படிப்படியாக ஒன்றிய அரசு தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் குறைய வாய்ப்பு இருக்கிறது. அதற்கு இதுவரை ஒரு பதிலும் சொல்லவில்லை, ஒன்றிய அரசு இவ்வளவு வஞ்சிக்கிறார்கள். என்றால் அவர்கள் தமிழகத்தில் காலூண்டினால் அவர்கள் எப்படி வஞ்சிப்பார்கள்.
தமிழகத்தை எப்படி வஞ்சிப்பார்கள் தமிழக பாரம்பரியம் கலாச்சாரம் எப்படி பாடுபடும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். என்பதற்காக ஓரணியில் தமிழ்நாடு என நாமெல்லாம் ஒன்று பட வேண்டும். தமிழகத்தை வஞ்சிக்கும் பாசிச பாஜக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என்பதற்காகவும் இந்த பிரச்சாரம் பயணம் மூலம் மக்களை சந்திக்க உள்ளோம்.
முதல்வரின் நான்காண்டு சாதனைகள் பிரச்சார பயணங்கள் சாதனைகளில் அமைச்சர் பட்டியல் இட்டார் அதுபோல் விண்ணப்பிக்கக்கூடிய அத்தனை பேருக்கும் ரேசன் கார்டு வழங்கி வருகிறோம்.
மேலும் சிவகங்கை மாவட்டத்தில் காவல் நிலையத்தில் விசாரணை கைதி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமி போல் டிவியை பார்த்து தெரிந்து கொண்டேன்.
சாத்தான்குளத்தில் தந்தை மகன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றம் தலையிட்ட பிறகுதான் காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர். ஆனால் முதல்வர் ஸ்டாலின் உடனே உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார் என தெரிவித்தார். பேட்டியின் போது, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட திமுகவினர் உடனிருந்தனர்.