தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் காமராஜர் நகர் பகுதியில் தொடர் மின்வெட்டு காரணமாக அப்பகுதி பல நாட்களாக இருளில் மூழ்கி கிடைக்கிறது இதனை போர்க்கால அடிப்படையில் சீர் செய்யப்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ் பி மாரியப்பன் மின்வாரிய தலைமை பொறியாளருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார் இந்த கோரிக்கை மனுவில் அவர் தெரிவித்ததாவது
ஐயா,
நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான் குடியிருக்கும் பகுதியான சாயர்புரம் காமராஜ்நகர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர். இப்பகுதியை சுற்றி அடர்ந்த முட்புதர்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால், கொடிய நச்சு விஷம் கொண்ட பாம்புகள் நடமாட்டம் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை உள்ளது. இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர அச்சப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது இதுகுறித்து மின்விநியோகம் இன்றி பாதிக்கப்பட்ட குடியிருப்பு வாசிகள் மற்றும் காமராஜ் பகுதி மக்கள் சார்பாகவும் பலமுறை சாயர்புரம் பகுதிமின் விநியோக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. எங்கள் பகுதி தொடர்ந்து இருளில் மூழ்கி காணப்படுகிறது.
தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான விடியல் ஆட்சியில் இப்படியொரு நிலைமை ஏற்பட்டுள்ளதால், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பான பணிக்கு களங்கம் ஏற்படும் வகையில் அமைந்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால், இது காற்றடி காலம் இப்படி தான் மின்தடை தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும் என அலட்சியமாக பதில் தருகிறார்கள். எங்களது காமராஜ் நகர் பகுதியில் மட்டும் காற்று அதிகமாக இருக்கிறதா?? தமிழ்நாட்டில் பிற பகுதிகளில் காற்று வீசவில்லையா? உரிய நேரத்தில் மின்வெட்டை சீர் செய்து தராமல் அதற்கு ஒரு அலட்சியமான பதிலை கொடுத்து வருகின்றனர் .
எனவே, தமிழ்நாடு
மின்சார துறை அமைச்சர், தமிழ்நாடு மின்வாரிய தலைமை பொறியாளர் மற்றும் தூத்துக்குடி மின்வாரிய தலைமை பொறியாளர் ஆகியோர் உடனடியாக தலையிட்டு தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன் மடம் ஊராட்சி பகுதியில் உள்ள காமராஜர்நகர் பகுதியில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வரும் நிலைக்கு முற்றுபுள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காமராஜ்நகர் பகுதி பொதுமக்கள் சார்பாகவும் பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்பு சார்பாகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். என்று அதன் நிறுவனத் தலைவர் எஸ் பி மாரியப்பன் தெரிவித்துள்ளார்.