தூத்துக்குடி
திருச்செந்தூா் சுப்பிரமணியசுவாமி கோவில் குடமுழுக்கு விழா வரும் 7ம் தேதி நடைபெறுகிறது. அதனையொட்டி தூய்மை பணியை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தூத்துக்குடி மாநகராட்சி 50 தூய்மை பணியாளர்கள் திருச்செந்தூர் செல்கின்றனா். அவா்களது வாகனத்தை ெகாடியசைத்து மேயர் ஜெகன் பொியசாமி வழியனுப்பி வைத்த பின் கூறுகையில் திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்பதற்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவையும் கடந்து வௌிநாடுகளை சேர்ந்த பக்தா்கள் சுமாா் 2 லட்சம் வரை பங்கேற்பாா்கள் என எதிர்பாா்க்கப்படும் நிலையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க கனிமொழி எம்.பி நேரடி பாா்வையில் அமைச்சர்கள் சேகா்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாாிகள் அப்பணியை முழுமையாக கண்காணித்து பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திருச்செந்தூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுடன் இணைந்து தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை பணியாளா்கள் நகராட்சி பகுதி முழுவதும் சுகாதாரத்தை பேணி பாதுகாக்கும் பொருட்டாக முழுநேர பணியாளராக இன்று முதல் குடமுழுக்கு விழா முடிந்த பின்பு 10ம் தேதி வரை தூய்மை பணியில் ஈடுபடுவாா்கள் முதலமைச்சாின் உத்தரவிற்கிணங்க பணிகளை மேற்கொள்ளும் தூய்மை பணியாளா்களுக்கு தங்கும் இடம் வசதி உள்பட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாநகராட்சி சாா்பில் முத்தையாபுரம் உப்பாற்று ஓடை பகுதியில் பக்தா்களுக்கு தங்கும் காற்றோட்டமான பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதையும் பக்தா்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் மாநகராட்சி பகுதிக்குள் வந்து செல்லும் வாகனங்களுக்கு இடையூறு இல்லாத நிலையில் அப்பகுதி ஓழுங்குப்படுத்தப்பட்டுள்ளது. என்று தொிவித்தாா்.
உடன் ஆணையா் பானோத் ம்ருகேந்தா்லால், இணைஆணையா் சரவணக்குமாா், நகா்நல அலுவலா் சரோஜா, சுகாதார ஆய்வாளா்கள் நெடுமாறன், கண்ணன், ராஜபாண்டி, மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமாா், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா், ஆணையாின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயாின் நோ்முக உதவியாளர் ரமேஷ், உள்பட பணியாளா்கள் ஊழியர்கள் உடனிருந்தனா்.